பெஞ்சல் புயலால் மெரினாவில் மின்கசிவு! பொய் செய்தி பரப்பியதாக அதிமுக நிர்மல்குமாருக்கு முன்ஜாமீன்
சென்னை: சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. அப்போது, சென்னை மெரினாவில் மழை நீர் காரணமாக மின் கசிவு ஏற்பட்டதாக அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் தகவல் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, பொய்யான தகவல்களை பரப்பியதாக நிர்மல் குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நிர்மல் குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிர்மல் குமார் தரப்பில் வழக்கறிஞர் செல்வம் ஆஜராகி, எந்த ஒரு பதிவையும், உறுதிபடுத்தாமல் எக்ஸ் தளத்தில் பதிவிடமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யபட்டது.
காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, நிர்மல்குமாருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி, ஒரு வாரத்திற்கு சென்னை சைபர் க்ரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டார்.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications