'ஓர் ஆண்டு தான் டைம்..' அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதி ஏற்படுத்த ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும், அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கட்டிடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு தற்போது முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநர்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநர்

முன்னதாக இந்த வழக்கில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள 49,500 அரசு கட்டிடங்களில் 26,769 கட்டிடங்களில் நுழைவு வாயில்களில் சாய் தளம் மற்றும் கைப்பிடி அமைக்கப்பட்டுள்ளதாகவும், 21,063 கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்லக்கூடிய வகையில் வாகன வசதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல், 1029 கட்டிடங்களில் பிரெய்லி முறையில் லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

54% அரசு கட்டிடங்கள்

54% அரசு கட்டிடங்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் 54 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2017ல் கொண்டு வருவதற்கு முன்புள்ள, 45 சதவீத கட்டிடங்களைப் பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வண்ணம் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனையின் படி இந்த அனைத்து பணிகளும் 2022 ஜூன் 15ம் தேதிக்குள் வசதிகள் ஏற்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசு உறுதி

தமிழ்நாடு அரசு உறுதி

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துகுமார், அனைத்து அரசு கட்டிடங்களிலும், அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் அணுக முடியாத அளவிற்கு எந்த கட்டிடங்களும் இருக்காது என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம் உத்தரவு

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வசதிகளை அடுத்த ஆண்டிற்கு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், தமிழ்நாடு அரசு இதை நிறைவேற்றத் தவறினால் சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+