Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு வேலைக்கு போலி ஜாதி சான்றா? "இடஒதுக்கீட்டை சுரண்டுறாங்க".. "விடவே கூடாது" - ஹைகோர்ட் அதிரடி

"போலி ஜாதி சான்றிதழை வழங்கி அரசுப் பணிகளில் சேருவது இடஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டும் செயல் ஆகும்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு வேலைக்காக போலி ஜாதி சான்றிதழ் வழங்கி இட ஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். தான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் வழங்கி 1982-ம் ஆண்டு கோவை வன மரபியல் நிறுவனத்தில் கலாசியாக இவர் பணிக்கு சேர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 1999-ம் ஆண்டு இளநிலை எழுத்தராக பாலசுந்தரத்துக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அவரது ஜாதி சான்றிதழ் மாநில அளவிலான ஆய்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

Madras High Court comment on fake community certificates for government jobs

அவரது ஜாதி சான்றிதழை ஆய்வு செய்தபோது, அவரது சகோதரரும், சகோதரியும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறிந்த மாநில அளவிலான குழு, பாலசுந்தரத்தின் பழங்குடியினர் ஜாதி சான்றிதழை கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்தது. இதன் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வுபெற்ற அவரது ஓய்வு கால பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதையடுத்து, 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தனது ஜாதி சான்றிதழை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்வது சட்டபூர்வமானதல்ல எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலசுந்தரம் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவானது, நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா ஆகியோர் கொண்ட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பன்முக தன்மை கொண்ட இந்தியாவில் இடஒதுக்கீட்டு கொள்கை பெருமைக்குரிய ஒன்று எனவும், அரசு வேலைக்காக இட ஒதுக்கீட்டு கொள்கையை துஷ்பிரயோகம் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் விடக்கூடாது எனவும் கூறினர். மேலும், பாலசுந்தரத்தின் ஜாதி சான்றிதழை ரத்து செய்ததை உறுதி செய்த நீதிபதிகள், அவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

போலி ஜாதி சான்றிதழை கண்டறிய தாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி, இடஒதுக்கீடு கொள்கையை துஷ்பிரயோகம் செய்ததை நியாயப்படுத்த முடியாது எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+