Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாட்டு நாய்களை வளர்க்கலாமா? மத்திய அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாட்டு நாய்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. இருப்பினும் இதற்கு பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் நாய்கள் ஆபத்தானவையா? இல்லையா? என்பது குறித்து கண்டறிய அவற்றிற்கு உளவியல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு மடல் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இருக்கிறது. கடந்த மே மாதம், இந்த பூங்கா பராமரிப்பாளரின் ரகுவின் மகள் வழக்கம்போல பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது, அங்கு வந்த 2 ராட்வைலர் நாய்கள் சிறுமியை சரமாரியாக கடித்த குதறியிருக்கின்றன. இந்த நாயின் உரிமையாளர் நாய்களை எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பூங்காவுக்கு அழைத்து வந்ததுதான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

Dogs Central Govt Madras High Court

இந்த சம்பவத்தில் நாயின் உரிமையாளரான புகழேந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தையடுத்து தமிழகத்தில் நாய்களை வளர்ப்பதற்கான புதிய வழிகாட்டுதலை மாநில அரசு வெளியிட்டிருந்தது. அதில்,

"கீழ்காணும் தகவல் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. 12.03.2024 தேதியிட்ட இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் நடவடிக்கை மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களான,

*பிட்புல் டெரியர்
*தோசா இனு
*அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர்
*பிலா ப்ரேசிலேரியா
*டோகா அர்ஜென்டினா
*அமெரிக்கன் புல் டாக்
*போயர் போயல்
*கன்கல்
*சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக்
*காக்கேஷியன் ஷெபர்டு டாக்
*சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக்
*டோன் ஜாக்
*சர்ப்ளேனினேக்
*ஜாப்னிஸ் தோசா
*அகிதா மேஸ்டிப்
*ராட்வீலர்ஸ்
*டெரியர்
*ரொடீசியன் ரிட்ஜ்பேக்
*உல்ப் டாக்
*கேனரியோ அக்பாஸ் டாக்
*மாஸ்கோ கார்ட் டாக்
*கேன்கார்சோ
*பேண்டாக்

என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்படி நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும். இனப்பெருக்கம் செய்வதற்கும். வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டையும் தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்து அழைத்து செல்லவேண்டும்.

அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை / தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும்" என தெரிவித்திருந்தது.

இப்படி இருக்கையில் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு விதித்த தடை உத்தரவுக்கு எதிராக இந்திய கென்னல் கிளப் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,

"மத்திய அரசின் உத்தரவுக்கு பல மாநில உயர்நீதிமன்றங்கள் தடை விதித்திருந்தது. மேலும் தடை உத்தரவை மீறி நாய்களை வகைப்படுத்துவது குறித்து பொதுமக்களின் கருத்துக்களை மத்திய கால்நடைத்துறை கோரியது சட்ட விரோதமானது" என மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, நாய்களின் உளவியல் குறித்தும், நடத்தைகள் குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே நாய்கள் ஆக்ரோஷமானவையா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+