விஜய் முதல்வரானதும் திருப்பம்.. 15 கோடி ரூபாய் மறைப்பு வழக்கை வாபஸ் பெற்ற மனுதாரர்
சென்னை: புலி திரைப்பட விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது 'புலி' திரைப்பட வருவாய் விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலுக்கு மத்தியில் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
புதிய மனுவின் பின்னணி
கோரிக்கை: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த எம். ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், 'புலி' திரைப்பட வருமானத்தில் நிதி மோசடி மற்றும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக விஜய் மீது வருமான வரித்துறையினர் வழக்குப் பதிவு செய்யவும், காவல்துறை FIR பதிவு செய்யவும் கோரப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு: மார்ச் 18-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவுக்குப் பதிவாளர் அலுவலகம் முதலில் எண் வழங்க மறுத்தது. பின்னர் ஏப்ரல் 8 அன்று, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாச்சாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு இதற்கு எண் வழங்க உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
சர்ச்சையின் தொடக்கம் (2015 சோதனைகள்)
IT ரெய்டு: கடந்த 2015 செப்டம்பர் 30 அன்று விஜய் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
கணக்கில் வராத பணம்: 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸின் பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், விஜய்க்கு காசோலை மூலம் வழங்கிய ரூ.16 கோடி ஊதியம் தவிர, கூடுதலாக ரூ.4.93 கோடியை ரொக்கமாக வழங்கியது சோதனையில் தெரியவந்தது.
விஜய்யின் விளக்கம்: இது குறித்து வருமான வரித்துறை விசாரித்தபோது, தான் ரூ.5 கோடி ரொக்கமாகப் பெற்றதை ஒப்புக்கொண்ட விஜய், அதற்கான வரியைச் செலுத்தச் சம்மதித்தார். மேலும், கடந்த ஆறு ஆண்டுகளில் 'புலி' படத்திற்காகப் பெற்ற இந்தத் தொகையைத் தவிர வேறு எந்த கணக்கில் காட்டப்படாத வருமானமும் இல்லை என்றும் அவர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அபராதம் மற்றும் தள்ளுபடி: கணக்கில் காட்டாத வருவாய்க்காக விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்திற்கு எதிராக விஜய் தொடர்ந்த மனுவை, கடந்த 2026 பிப்ரவரி 6 அன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தள்ளுபடி செய்தார்.
மேல்முறையீடு: இத்தள்ளுபடிக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கை மனுதாரர் வாபஸ் பெறுவதாக கோரினார். அதன்படி அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில் 15 கோடி ரூபாய் வரி மறைவு வழக்கு வாபஸ் பெறப்பட்டது பெரும் திருப்பமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications