பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.. தமிழக அரசு வைத்த முக்கியமான வாதம்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்ட தனியார் நிறுவனத்துக்கு அரசு வழங்கியுள்ள அனுமதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வக்கீல் பிரஸ்னவ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில், சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணிக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டியுள்ள தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், நாவலூர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகள் இருக்கின்றன. இதில் பெரும்பாக்கம் சோழிங்கநல்லூரை ஒட்டி உள்ளது. இது சதுப்புநிலத்தை ஒட்டியுள்ள பகுதியாகும். மேலும் பாதி ஊரே சதுப்பு நிலத்தில் தான் இருக்கிறது. இதன் காரணமாக
பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதிகளில் கட்டுமானங்கள் அதிகரித்துள்ளது.

இந்த சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்ட தனியார் நிறுவனத்துக்கு அரசு வழங்கியுள்ள அனுமதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வக்கீல் பிரஸ்னவ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில், சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணிக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, "இந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை செயற்கை கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது" என்று கூறினார்.
தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், "நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலத்தை பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தற்போதைய எல்லையை வரையறுக்கும் பணிகள் முடிந்து, அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை தள்ளிவைக்கவேண்டும்" என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் எஸ்.தமிழ்செல்வன் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று, தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக சென்னையின் பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலம் அழிக்கப்பட்டு வருவதாக எழுந்த புகாரை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தென்னிந்திய தீர்ப்பாயம் கடந்த சில மாதம் முன்பு பிறப்பித்த உத்தரவில், 'ஆக்கிரமிப்பு, உள்ளிட்ட பல காரணங்களால் சென்னையின் சதுப்பு நிலப்பகுதிகள் மிகவும் சுருங்கி விட்டது. எனவே தற்போது எஞ்சியிருக்கும் சதுப்பு நில பகுதிகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ராம்சர் சதுப்பு நில கணக்கெடுப்பு மற்றும் ராம்சர் தளத்தை பராமரிப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களின் அடிப்படையில், நீர்வளத்துறை, மாநில சதுப்பு நில ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து, ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் இறுதி செய்யப்படும் வரை, தமிழக மாநில சதுப்பு நில ஆணையம் சென்னையின் கடைசியாக எஞ்சியிருக்கும் சதுப்பு நிலத்தின் இப்பகுதியை அறிவியல் ரீதியாக தீர்மானிக்கும் வரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் எந்த கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது. தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திட்ட அனுமதி வழங்குவதை கருத்தில் கொள்ளும்போது, ராம்சர் பகுதிகளை பராமரிக்கும் வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்" இவ்வாறு பசுமைத் தீர்ப்பாயம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications