திருச்சி கிழக்கு உட்பட.. 5 தொகுதி இடைதேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு! - உயர்நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த தடையை ஆக.24 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை என 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் மீதான தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே, தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications
