Pallikaranai Marshland: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட தடை! உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எந்தவித கட்டுமான பணிகளையும் தனியார் கட்டுமான நிறுவனம் மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ராம்சார் தளமாக அங்கீகரிக்கப்பட்ட சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் விதிகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு பிரிகேட் என்ற கட்டுமான நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை ரத்து செய்யக் கோரி அதிமுக சென்னை புறநகர் வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் பிரெஷ்நேவ் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பெரும்பாக்கம் கிராமத்தில் 4 பிளாக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட பிரிகேட் நிறுவனம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் அனுமதி பெற்றுள்ளது.
இந்த உத்தரவு பெற்ற 3 நாட்களுக்குள் சதுப்பு நிலப்பகுதி என தெரிந்தும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளது. இது சட்டவிரோதம். எனவே தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ராம்சார் தளமான பள்ளிக்கரணை பகுதியில் கட்டுமானத்திற்கு தடை உள்ளது.
இருந்தாலும் எந்த ஆய்வையும் செய்யாமல் தனியார் நிறுவனத்திற்கு 1400 குடியிருப்புகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்கியுள்ளது. இது சட்டவிரோதம் என கூறி அது தொடர்பான வரைபடங்களை அவர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில், மனுதாரர் கூறும் ஒட்டுமொத்த பகுதியில் சதுப்பு நில பகுதி அல்ல, கட்டுமானம் அமையும் பகுதி சதுப்பு நிலத்திற்கு வெளியே உள்ளது. சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் உதவியுடன் சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் ஓரிரு வாரங்களில் நடைபெறும். தற்போது தனியார் கட்டும் கட்டுமானத்திற்கு முதலில் அனுமதி வழங்கியது சுற்றுச்சூழல் துறைதான். அதன் பிறகுதான் சிஎம்டிஏ அனுமதி வழங்கியது என வாதிட்டார்.
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மாநிலத்தில் சதுப்பு நிலங்களை ஆய்வு செய்து அடையாளம் காணும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்துள்ளது. நிலங்களை கண்டறியும் பணிகளும் இன்னும் முடியவில்லை. இப்படியிருக்கும் நிலையில் நிலத்தை மாற்றியமைத்து கட்டுமான பணிகளை தொடர, கட்டுமான நிறுவனத்திற்கு சிஎம்டிஏ எப்படி அனுமதி வழங்கியது? சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக வரையறுக்கும் பணிகள் நிறைவு பெறும் முன் கட்டுமானங்கள், வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி அளித்து வந்தால் ஒட்டுமொத்த சதுப்பு நிலமும் அழிந்து விடும்.
எனவே உச்சநீதிமன்ற உத்தரவின்படி சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் வரையறுக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும். அதுவரை அந்த பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு வரும் 12 ஆம் தேதிக்குள் தமிழக அரசு, மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications