பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு பிடி வாரண்ட்.. சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 97 வயது சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்காத, தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்திருந்த திருவள்ளூரைச் சேர்ந்த 97 வயது சுதந்திரப் போராட்ட வீரர் வேலு என்பவருக்கு, 2021ம் ஆண்டு முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் குற்றப்பிரிவு டிஎஸ்பி ராமலிங்கத்துக்கு எதிராக வாரண்ட்.. சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு
ஆனால், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த 1987 ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு, தனக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், 1987ல் அவர் விண்ணப்பித்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற போதும், 2008 ஆம் ஆண்டு அளித்த ஒரு விண்ணப்பத்தை கருத்தில் கொண்டு 2008 முதல் 2021 வரைக்கான ஓய்வூதிய பாக்கியை வழங்கும்படி, தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சுதந்திர போராட்ட வீரர் வேலு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், உத்தரவை அமல்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கியும் ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால், பொதுத்துறை கூடுதல் செயலாளர் அந்தோணிசாமிக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த வாரண்டை செயல்படுத்தி, ஜூலை 8 ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது!












Click it and Unblock the Notifications