விழுப்புரம் குற்றப்பிரிவு டிஎஸ்பி ராமலிங்கத்துக்கு எதிராக வாரண்ட்.. சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கொலை முயற்சி வழக்கில் சாட்சி அளிக்க ஆஜராகாத விசாரணை அதிகாரியான விழுப்புரம் மாவட்ட டிஎஸ்பி ராமலிங்கத்துக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தரமணி கானகம் தெருவைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளி செந்தில், தனது மளிகை கடை முன் நின்று பேசிக் கொண்டிருந்த வினோத் என்பவரை துரத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத், 2021 அக்டோபர் 29ம் தேதி, செந்திலை வழிமறித்து கத்தியால் வெட்டியுள்ளனர்.

Villupuram Chennai Court crime


இந்த சம்பவம் தொடர்பாக, தரமணி போலீசார், வினோத் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.அபிராகம் லிங்கன் முன் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், சாட்சியம் அளிக்க ஆஜராகும்படி, வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ராமலிங்கத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து மூன்று முறை சம்மன் அனுப்பியும் டிஎஸ்பி ராமலிங்கம் சாட்சி அளிக்க ஆஜராகவில்லை. இதனலால், விசாரணை அதிகாரி டிஎஸ்பி ராமலிங்கத்துக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+