பென் டிரைவ் எங்கே? அதிமுக கலவர வீடியோவை பார்த்த நீதிபதி.. பட்டென சிரித்து.. அடுத்து கேட்ட கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வீடியோவை இன்று உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் ஆய்வு செய்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து, தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அங்கு ஏற்பட்ட கலவரத்தில் பலர் மீது போலீசார் தரப்பு எப்ஐஆர் பதிவு செய்தது.

இந்த சீல் உத்தரவை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

விசாரணை

விசாரணை

இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. நேற்று விசாரணை முடிவில் அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த 11ம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் போலீஸ் தாக்கல் செய்த வீடியோ ஆதாரங்களையும், அறிக்கையையும் நீதிபதி சோதனை செய்தார். இதையடுத்து போலீஸ் தாக்கல் செய்த வீடியோவை பார்த்தபடியே நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

 விசாரணை நடந்தது

விசாரணை நடந்தது

நீதிபதி: அதிமுக அலுவலகம் உள்ளே கூட்டம் இருந்தது போலீசுக்கு தெரியுமா?
போலீஸ் தரப்பு: அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் தரப்பு அதிகாலை வந்தது. அதன்பின் எடப்பாடி தரப்பு 8 மணிக்கு வந்தது.

நீதிபதி: கலவரத்தை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?
போலீஸ் தரப்பு: போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இரண்டு பக்கமும்கூடிய கூட்டத்தை தடுக்க முயன்றோம். ஆனால் அதை மீறி கலவரம் செய்தனர்.

நீதிபதி வீடியோவை தொடர்ந்து பார்க்கிறார்கள். வீடியோவை நீதிபதி கூர்ந்து கவனித்து வருகிறார்.

வீடியோவை பார்த்தனர்

வீடியோவை பார்த்தனர்

நீதிபதி: போலீஸ் ஏன் கலவரத்தை தடுக்காமல் அமைதியாக இருந்தது. ஏன் இவர்களை கலைக்கவில்லை.
போலீஸ் தரப்பு: போலீஸ் தடுத்தது. போலீஸ் தடுக்கவில்லை என்றால் பலர் பலியாகி இருப்பார்கள். நாங்கள் தடுத்த காரணத்தால்தான் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பொதுமக்களுக்கு காயம் ஏற்படவில்லை.

நீதிபதி: வீடியோவை பார்த்தால் போலீஸ் தலையிட்டது போல தெரியவில்லை.
போலீஸ் தரப்பு: இல்லை யுவர் ஆனர்.. நாங்கள் தலையிட்டோம்

எடப்பாடி தரப்பு: வீடியோவை பார்த்தாலே போலீஸ் சரியாக செயல்படவில்லை என்று தெரியும்.
ஓபிஎஸ் தரப்பு: எங்களிடமும் நிறைய வீடியோ ஆதாரங்கள் உள்ளன.

பென் டிரைவ் லேப்டாப் எங்கே?

பென் டிரைவ் லேப்டாப் எங்கே?


நீதிபதி தொடர்ந்து வீடியோவை பார்த்து வருகிறார். போலீஸ் கொடுத்த லேப்டாப்பில் வீடியோவை பார்த்தவர்.. போலீசிடம் இந்த வீடியோவிற்கான பென் டிரைவ் எங்கே?

போலீஸ்: பென் டிரைவ் லேப்டாப்பில் உள்ளது.

தொடர்ந்து வீடியோவை பார்த்த நீதிபதி திடீரென களுக்கென்று சிரித்தார்.

நீதிபதி: இந்த வீடியோ ஆதாரத்தை வைத்தே சீல் செய்யப்பட்டதா? டிவியில் நான் பார்த்ததில் 10 சதவிகிதம் கூட இதில் இல்லையே? சட்ட ரீதியாக எதன்அடிப்படையில் சீல் வைத்தீர்கள்.

ஆர்டிஓ முடிவே இறுதியானது

ஆர்டிஓ முடிவே இறுதியானது

போலீஸ்: சட்ட ரீதியான விவரங்களை ரிப்போர்ட்டில் தாக்கல் செய்து உள்ளோம். ஆர்டிஓ முடிவு எடுத்த பின் அதில் ஹைகோர்ட் தலையிட முடியாது. இரண்டு தரப்பும் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகி முடிவு எடுக்க வேண்டும். அதோடு இரண்டு தரப்பும் இனியும் அங்கே மோதிக்கொள்ளாது என்று உறுதி அளிக்க முடியாது.அங்கு மோதல் ஏற்பட்டால் மக்களுக்குதான் பாதிப்பு வரும். மக்கள் அமைதிக்குதான் பாதிப்பு வரும். இதில் எப்ஐஆர்-றும் பதிந்து இருக்கிறோம்.

நீதிபதி: குற்றவாளிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்தது நல்லது. இந்த வீடியோவில் நான் பார்த்தேன் ஒருவர் ஹெல்மெட் போட்டு இருக்கிறார். அதை பாராட்ட வேண்டும் (கிண்டலாக) .

கோர்டில் சிரிப்பலை ஏற்பட்டது.

வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+