Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வந்த குட் நியூஸ்.. சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த முக்கியமான உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேரடி தேர்வு மூலமாக தேர்வான 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) உத்தரவிட்டுள்ளது. உரிய இட ஒதுக்கீடு முறையை கடைப்பிடித்து அரசு பணி நியமன உத்தரவுகளை வழங்கலாம் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் ஆக வேண்டும் என்ற கனவோடு லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் படித்து வருகிறார்கள். இதில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களானது பிஃப்டி பிஃப்டி அடிப்படையில் அதாவது 50 சதவீதம் நேரடி தேர்வு முறையாகவும், 50 சதவீதம் பதவி உயர்வு முறையாகவும் நிரப்பப்படுகின்றன.

madras-high-court-orders-tn-govt-to-appoint-2-500-graduate-teachers-selected-via-direct-recruitment

50 சதவீத நேரடி நியமனம்

அதாவது 50 சதவீத நேரடி நியமனத்தில், 2 சதவீத இடங்கள் ஆசிரியர்கள் அல்லாத (பள்ளிக்கூட) ஊழியர்களை கொண்டு நிரப்பப்படும். இதற்கிடையே தமிழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடி தேர்வு நடத்தி, 2,500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன உத்தரவு பிறப்பிப்பதற்கான நடைமுறைகள் நடந்து வந்தன. அப்போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், 'நேரடி நியமனத்தில் தங்களுக்கு வழங்க வேண்டிய 2 சதவீத இடஒதுக்கீட்டினை வழங்காமல் 2,500 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கக் கூடாது'' என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான 2 சதவீத இடத்தை நிரப்பாமல், 2,500 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தை மேற்கொள்ளக்கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஏற்கனவே அரசு நியமித்து விட்டது

இதற்கிடையே, இந்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், 'ஏற்கனவே 2,500 பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனத்துக்காக காத்திருக்கும் சூழலில், தனி நீதிபதி உத்தரவால் அவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இடைக்கால தடை உத்தரவினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும், 2,500 பேருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''2,500 பேருக்கான பணி நியமன உத்தரவுகள் தயாராக உள்ளன. 2 சதவீத ஒதுக்கீட்டில் ஆசிரியர் அல்லாத ஊியர்களில் தகுதியானவர்களை ஏற்கனவே அரசு நியமித்து விட்டது.

எந்த பாதிப்பும் வராது

தற்போது அந்த 2 சதவீத ஒதுக்கீட்டில் காலி இடம் இல்லை'' என்று கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ''நேரடி நியமனங்களுக்கான 50 சதவீத பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2,500 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என்று உரிய இட ஒதுக்கீடு முறையை கடை பிடித்து அரசு பணி நியமன ஆணைகள் வழங்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த நியமனத்தால், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. எனவே அவர்கள் இந்த பணி நியமனத்தில் தலையிட முடியாது. இவர்களுக்கான 2 சதவீத இடஒதுக்கீடு குறித்து இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையில் முடிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+