அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவோருக்கு குட்டு.. சென்னை நீதிமன்றம் பிறப்பித்த அதிமுக்கிய உத்தரவு
சென்னை: தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், அதைத் தடுப்பதற்கான சட்டவிதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை என சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவர் தொடர்ந்த 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
தந்தை மறைவிற்குப் பிறகு இந்த வழக்கை மகன் ககன் சந்த் போத்ரா வழக்கை நடத்தி வருகிறார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த சட்டவிதிமீறுல்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை கவனம் செலுத்தவில்லை எனத் தெரிவித்ததுடன், வழக்கில் தமிழக டிஜிபி-யை 5வது எதிர் மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டார். மேலும், இந்த விதிகளை முறையாக அமல்படுத்துவது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலக அல்லது டிஜிபி அலுவலக உயர் அதிகாரியிடமிருந்து விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

பாதிக்கப்படக் கூடாது
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய அரசு மற்றும் மாநில அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராகப் புகார் அளிப்பவர்கள் பாதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்தார். மேலும் தற்போது பதவியில் உள்ள எம்.பி.,-க்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரின் வாகனங்களில் அரசு சின்னங்களைப் பயன்படுத்தலாம் என விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி ஓய்வுபெற்ற பின்னரும் பயன்படுத்துவதாகவும், அரசின் கடைநிலை ஊழியர்கள் வரை பயன்படுத்துவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றம் கேள்வி
இவ்வாறு அனைவரும் பயன்படுத்தினால் சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தவோ, விசாரிக்கவோ செய்வார்கள் என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். அதனால், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோர் தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய உத்தரவு
இதுபோன்ற செயல்பாடுகள் மீது கான்ஸ்டபிள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எவ்வாறு அமல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளைத் தமிழக டிஜிபியும், சென்னை மாநகர காவல் ஆணையரும் வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications