சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது.. சென்னை ஐகோர்ட் மறுப்பு!
சென்னை: தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்தது தொடர்பாக தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கி இருந்து. இந்த அரசு உத்தரவை மீறி கனசபை மீது பக்தர்களை ஏற விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் அரசு உத்தரவை மீறிய கோயில் தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பட்டு தீட்சிதர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கோபி, வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை ரத்து செய்ய மறுத்து தீட்சிதர்கள் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பெண் பக்தரை, சாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக, தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தீட்சிதர்கள் கவுரி சங்கர் உள்ளிட்ட 8 பேர் மீது தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடலூர் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தீட்சிதர்கள் கவுரி சங்கர் உள்ளிட்ட எட்டு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கையும் நீதிபதி ரத்து செய்ய முடியாது என மறுத்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications