அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவிட்ட ஹைகோர்ட்!
சென்ன: அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்ற விதி வகுக்கப்பட வேண்டும்; அரசின் அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் ஆன பின்பு பணம் வைத்துக் கொள்ள வரம்பு தேவை எனவும், இதற்கான வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? இத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால், அது அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைக் கட்டுப்படுத்த ஒரு வகையில் உதவும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரையில் கிளையில் கலா என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில்," திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளராகப் கடந்த 2021 ஆண்டு பணியின் போது ரூ.45,000 வைத்திருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையின் திடீர் சோதனையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தான் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மணி நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் சொந்த செலவுக்காக வைக்கப்பட்டிருந்த பணம் என தெரிவிக்கப்பட்டது
அரசுத்தரப்பில், பதிவுத்துறையின் தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை படி பணியில் இருக்கும்போது தங்களிடம் வைத்திருக்கக் கூடிய பண வரம்பு குறித்தும், இது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்," சுற்றறிக்கையைத் தாக்கல் செய்திருந்தாலும், அது பதிவுத்துறையால் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து அரசு ஊழியர்களையும் உள்ளடக்கிய பொதுவான வழிகாட்டுதல்களோ அல்லது அரசாணையோ இல்லை என்றே தெரிகிறது.
அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தங்களிடம் வைத்திருக்கக்கூடிய ரொக்கப் பணத்திற்குப் பொதுவான வரம்பை நிர்ணயித்து ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், அரசு குறிப்பாக மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளரின் கருத்துக்களை இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.
அரசின் அனைத்துப் பண பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும் போது, இன்றைய சூழலில், அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு தங்களது பயன்பாட்டிற்காக கொண்டு வரும் பணம் குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்து அரசு தீர்வு காண வேண்டும். இத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால், அது அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைக் கட்டுப்படுத்த ஒரு வகையில் உதவும். ஊழலற்ற நிர்வாகம் அமைய வேண்டும் என்றால் இது போன்ற வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்ட வேண்டும். எனவே இது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.


Click it and Unblock the Notifications
