'போலீஸ் விசாரணையில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. குற்றவாளிகள் எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்..' ஐகோர்ட் வேதனை
சென்னை: புலன் விசாரணையில் உள்ள குறைபாடுகள் காரணமாகக் குற்றவாளிகள் தப்பி விடுவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய எர்லம் பெரைரா என்பவர், யு.கே.ஜி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல்துறை போக்ஸோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரின் வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாகவும், மருத்துவ ஆதாரங்கள் வழக்குக்கு ஆதரவாக இல்லை எனக் கூறி, ஆசிரியரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து காவல்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமி, ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே மாதிரியாக வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்தனர்.
மேலும், ஆசிரியர் பெரைரா குற்றம் புரிந்துள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி, அவரை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்து, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், வழக்கின் புலன் விசாரணையில் உள்ள குறைகளால் குற்றவாளிகள் தப்பி விடுவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, இதுபோன்ற வழக்குகளில் குறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைத் தேட வேண்டும் எனவும் கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
-
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications