”மெட்ராஸ் ஈஸ் பியூட்டிபுல்” – சென்னையின் அழகை விவரிக்கும் 2 நிமிட வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை- பிழைப்புத்தேடி வந்தவர்களையும், ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களையும் தன்னுள் பிணைத்துக் கொண்ட நகரம்.

சென்னையில் பிறந்தவர்களைவிட வாழ வந்தவர்கள்தான் அதிகம்.

பலதரப்பட்ட மக்களைத் தன்னகத்தே கொண்ட சென்னையின் வாழ்க்கையை "மெட்ராஸ் ஈஸ் பியூட்டிபுல்" என்ற வீடியோ படம் பிடித்துக் காட்டியுள்ளது.

ரசிக்கும் மக்கள்:

ரசிக்கும் மக்கள்:

இரண்டரை நிமிடமே கொண்ட இந்த வீடியோவை சென்னையுடன் தங்களை பிணைத்துக்கொண்ட பலர் யூடியூபில் கண்டு ரசித்து வருகின்றனர்.

மெட்ராஸின் முகங்கள்:

மெட்ராஸின் முகங்கள்:

இப்போதும் இயங்கும் பழைய கிராமபோன், மெரினா கடற்கரையில் குளிக்கும் சிறுவர்கள், தனது வாழ்நாள் வருமானத்திற்காக கடலை நோக்கி புறப்படும் மீனவர், பாரிமுனையில் இருக்கும் கூலி வேலையாட்கள் எனப் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கை வெளிப்படுகின்றது வீடியோவாய்.

பதிவான முகங்கள்:

பதிவான முகங்கள்:

மெல்லியதாக மனம் வருடும் இசையோடு மெட்ராஸின் பல்வேறு முகங்களை இந்த வீடியோ பதிவு செய்துள்ளது.

ஆவணப்படக் கலைஞர்:

ஆவணப்படக் கலைஞர்:

பாலாஜி என்ற 28 வயதான ஆவணப்பட கலைஞர் உருவாக்கியுள்ள இந்த வீடியோ மெட்ராஸின் பல்வேறு அழகர்த்தங்களை படம்பிடித்துள்ளது.

புகைப்படக் கலை ஈடுபாடு:

புகைப்படக் கலை ஈடுபாடு:

புகைப்படக் கலை மீது உள்ள ஈடுபாட்டால், மென்பொருள் வேலையை விட்டு வெளியேறி தற்போது ஆவணப்படங்களை இயக்கி வருகிறார் பாலாஜி.

குளிரும் மனது:

குளிரும் மனது:

பாலாஜியின் இந்த வீடியோவுக்கு சென்னைவாசிகளின் வரவேற்பு இணையத்தில் குவிந்து வருகின்றது. அன்னை மடியாய் தாங்கிக் கொண்ட பூமியை அழகாய் பார்க்கும் போது மனது குளிர்ந்துதான் போகின்றது.

மெட்ராஸ் ஈஸ் பியூட்டிபுல

சென்னையின் அழகை விவரிக்கும் 2 நிமிட வீடியோ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+