இலங்கை தமிழர்களை கொன்றவங்களுக்கு மக்கள் ஓட்டு போட்டுட்டாங்களே.. வருத்தப்படும் மதுரை ஆதினம்
சென்னை: தமிழக மக்கள் அனைவருக்கும் ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.. ஆனால் மக்கள் மீது ஒரு வருத்தம் உள்ளது. லட்சக்கணக்கான இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களை ஜெயிக்க வைத்து விட்டார்களே என்ற வருத்தம் உள்ளது என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைத்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. நேற்று பிரதமர் மோடியும் 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை 39/39 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதேபோல் நிறைய இடங்களில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெற்றது. இதோடு, சீமானின் நாம் தமிழர் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மாநில அந்தஸ்தை பெற்றன.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுரை ஆதினம், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைத்துள்ளார். இது தொடர்பாக மதுரை ஆதினம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லம் வாழ்த்துக்கள். தோல்வியடைந்தவர்களும் நிறைய வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள். தம்பி சீமானும் நிறைய வாக்குகளை பெற்றுள்ளார். தம்பி அண்ணாமலையும் நிறைய ஓட்டுகளை வாங்கியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்கும் வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், தோல்வி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஒரு வருத்தம் தமிழக மக்கள் மீது உள்ளது. அன்றைய தினம் இலங்கையிலே லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என்ற ஒரு வருத்தம் தான் உள்ளது. அதனால் தான் அவர்கள் மத்தியில் ஆள முடியவில்லை. அதே நேரத்தில் மோடி அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்தார். அதே நேரத்தில் மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை நான் வைக்கிறேன்.
ஒன்று அன்று இந்திரா காந்தி கட்சத்தீவை தூக்கி கொடுத்துட்டாங்க.. அந்த கட்சத்தீவை மீட்டு இன்றைய தினம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை, மீன் வலை அறுக்கப்படுகிறது, படகுகள் பறிமுதல் செய்கிறார்கள். இதற்கெல்லாம் கட்சத்தீவு தான் காரணம். இதனால் கட்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். இதேபோல் ஈழத்தில் உள்ள தமிழர்களை பாதுகாக்க தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளை மோடிக்கு வைக்கிறேன்.
விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, அண்ணாமலைக்கு நல்ல வாக்குகளை கொடுத்துவிட்டார்கள். என்ன, இலங்கை தமிழர்களை கொன்றவர்களை ஆதரித்தது மட்டும் பெரிய வருத்தமாக இருக்கிறது. பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு இருந்தால் இந்த இரண்டு கோரிக்கைகளை அவரிடம் வைப்பேன். தமிழனுக்காக தனி நாட்டை கேட்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications