தோசையை "திருப்பிய" எடப்பாடி பழனிசாமி.. "அதிமுகவை நாசம் பண்ணிட்டீங்களே".. திடீர்னு வந்த மதுரை வீடியோ
சென்னை: "அதிமுக தொண்டர்களுக்கு துரோகம் செய்துட்டீங்க.. டெபாசிட் கூட வாங்கலயே" என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கி வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
மக்களவை தேர்தலில், தமிழகத்தில், அதிமுக 32 இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. இதில், 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.

டெபாசிட்: நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆகமொத்தம் 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது.. இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
ஒருவேளை, பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் அதிமுக வென்றிருக்கும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து கூறியிருந்தார்.. ஆனால், தான் ஒருவர் மட்டுமே எல்லா இடங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்ததால்தான் தோல்வி என்று எடப்பாடி பழனிசாமி மறுப்பு சொல்லி உள்ளார். இதனால், அதிமுகவுக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி: இந்நிலையில் அதிமுக தொண்டர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.. அதில் அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாக கொந்தளித்து பேசியிருக்கிறார். ஒருமையிலும், தகாத வார்த்தைகளிலும் அதிமுக தொண்டர்களை சாடி கோபத்துடன் பேசியிருக்கிறார் இந்த அதிமுக தொண்டர்.
"கேவலமா இருக்கு.. தென்மாவட்டங்களில் கூட ஓட்டு எடுக்க முடியல.. திருச்சியிலிருந்து, கன்னியாகுமரிக்கு வரைக்கும் 4வது இடம்.. இனிமேலாவது நீங்க எல்லாரும் ஒன்னு சேருங்க.. பேட்டிகளை தந்து கொண்டிருக்கும் ஜெயக்குமார், தன்னுடைய மகனை 2வது இடத்துக்காவது கொண்டு வர முடிந்ததா? 3வது இடத்துக்கு போயாச்சு.
தொண்டர்கள்: உயிரை கொடூத்து புரட்சித்தலைவர் வளர்த்த இயக்கம் இது.. இப்படிப்பட்ட இயக்கத்தையே அழிக்கிற சூழலுக்கு எல்லாரும் கொண்டுவந்திட்டீங்களே? கட்சி தொண்டர்கள் நாங்க எல்லாருமே கொதிச்சு போயிருக்கோம்..
ஆளுமை திறன் மிக்க ஒரு தலைவர் வேணும்.. அது யாருன்னு எல்லாரும் கூடிமுடிவெடுங்க.. ஆனால் அது எடப்பாடி கிடையாது.. இதுவரை 9 தேர்தலை சந்தித்து, தோல்வியையும் சந்திச்சாச்சு.. இந்த இயக்கம் நாசமா போச்சு.. இப்போ உடனயாக ஆளுமைமிக்க தலைவர் வேணும். அதனால் நீங்க எல்லாரும் சேர்ந்து உடனே முடிவெடுக்க வேண்டும்.
ஒன்னு சேருங்க: இந்த இயக்கத்தை அழிக்கும் வேலையை பார்க்காதீங்க.. இந்த இயக்கத்தக்காக சிறைக்கு போயி, கஷ்டப்பட்டு, நாங்கள்ளலாம் ஒன்னுமே சம்பாதிக்கல. நீங்க எல்லாரும்தான் கோடி கோடியா சம்பாதிச்சி வெச்சிருக்கீங்க.. எல்லாரும் ஒன்னு சேர்ந்து, புரட்சி தலைவர் ஆட்சியை கொண்டுவாங்க" என்று பேசியிருக்கிறார் இந்த தொண்டர்.
இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும்நிலையில், இந்த தொண்டர் யார் என்ற விசாரணையையும் போலீசார் முன்னெடுத்துள்ளனர். அந்த வீடியோவில் இருப்பவர், மதுரை கீரைத் துறை பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டரான மார்க்கெட் முத்துராமலிங்கம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ தற்போது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
முன்னதாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "பாஜக ஜனதாவுடன் கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என்று, நடந்து முடிந்ததைப் பற்றி பேசக்கூடாது. தேர்தலுக்கு முன்பு அண்ணாமலை பல கனவுகளை கண்டிருப்பார்.. அண்ணாமலையின் கனவு பலிக்கவில்லை என்பதால் இப்படி பேசுகிறார். பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை. எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.. கடந்த முறையைவிட, இந்த முறை தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி உயர்ந்திருக்கிறது" என்று கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது
-
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
"நடிகர் அஜித்துடன் இபிஎஸ்".. குமரி பிரசாரத்தில் தொண்டர் வழங்கிய பரிசு.. எடப்பாடி கொடுத்த ரியாக்சன் -
சார், இது பேட்டரி வைக்கிற இடம்.. நாகர்கோவிலில் எடப்பாடி வேனில் சல்லடை போட்ட பறக்கும் படை அதிகாரிகள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications