திருச்சியில் போயும் போயும் இந்த வயசில் அசிங்கப்பட்ட ஜோடி.. இவ்வளவு சொத்தா? மதுரை நீதிபதியின் கருணை
திருச்சி: திருச்சி தம்பதியினருக்கு, மதுரை நீதிமன்றம் தற்போது வழங்கியிருக்கும் தீர்ப்பு ஒன்று, பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. பொறுப்பான பதவியை வகித்து ரிடையர் ஆன நிலையில், உற்ற துணைகளும் யாருமின்றி, இன்று வயதான காலத்தில், பொதுவெளியில் அசிங்கப்பட்டுள்ளனர், இந்த தம்பதி.. எனினும், கருணை அடிப்படையில், முக்கிய சலுகையை நீதிமன்றம், இந்த தம்பதிக்கு வழங்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.. என்ன நடந்தது? யார் இந்த திருச்சி தம்பதியினர்?
திருவள்ளூர் கோர்ட்டில் கடந்த வாரம் வழக்கு ஒன்றில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.. திருத்தணியை சேர்ந்த அருணாச்சலம், அவரது மனைவி லலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் அந்த தீர்ப்பு தரப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமான சொத்து
அதாவது, வருவாய் கோட்ட அலுவலராக அருணாச்சலம் இருந்தபோது 1998 – 2007ல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இந்த புகார் எழுந்தது. அரசு ஊழியராக இருந்தபோது, குறிப்பாக, 1998 ஜனவரி 1 முதல், 2007 அக்டோபர் 30 வரையிலான காலத்தில் மட்டுமே அசையும், அசையா சொத்துகள் கிட்டத்தட்ட ரூ.69 லட்சத்துக்கு வாங்கி குவித்துவிட்டாராம்..முன்னாள் கோட்டாட்சியர் அருணாசலத்துக்கும், அவரது மனைவி லலிதாவுக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், அருணாசலத்துக்கு ரூ.35 லட்சம், லலிதாவுக்கு ரூ.5 லட்சம் என, அபராதத்தையும், திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் விதித்திருக்கிறது.இதோ திருச்சியிலும் ஒரு மூத்த ஜோடி வசமாக சிக்கியிருக்கிறது.. திருச்சியில் ஒன்றிய கலால் துறையில் சூப்பிரண்டாக இருந்து ஓய்வு பெற்றவர் கோவிந்தசாமி.. இவருக்கு 66 வயதாகிறது.. இவர் 1.1.2002 முதல் 23.2.2012 வரை தூத்துக்குடியில் பணிபுரிந்தார்.அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 10 லட்சம் சொத்து குவித்ததாக கோவிந்தசாமி, அவரது மனைவி கீதா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை மதுரை சிபிஐ கோர்ட் விசாரித்து இருவரையும் விடுதலை செய்து கடந்த 2018ல் தீர்ப்பளித்தது.
நீதிபதியின் அதிரடி தீர்ப்பு
ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில், மதுரை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், "லஞ்சம் பெறுபவர்களின் குடும்பத்தினரும் லஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள்.. லஞ்சம் ஒரு மனிதனை குருடனாக்குகிறது. அப்பாவி மக்களின் நியாயமான காரணத்தை நாசமாக்குகிறது.இந்த வழக்கை பொறுத்தவரை, கணவன், மனைவி ஆகிய 2 பேர் மீதான குற்றச்சாட்டை சிபிஐ நிரூபித்து உள்ளது. எனவே இருவரையும் விடுதலை செய்து மதுரை சிபிஐ கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
கீதாவை தவிர வேறு யாரும் இல்லை,
கோவிந்தசாமி, அவரது மனைவி கீதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், முறையே ரூ.75 ஆயிரம், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. கோவிந்தசாமி கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பதிவு செய்துள்ளார். அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள கீதாவை தவிர வேறு யாரும் இல்லை.இதனால் இருவருக்கும் மதுரை சிறை கண்காணிப்பாளர் ஏப்ரல் 10ம் தேதி வரை பரோல் வழங்க வேண்டும். பரோல் முடிந்ததுமே, 2 பேரும் மறுபடியும் 10ம் தேதி மாலைக்குள் ஜெயிலில் சரண் அடைய வேண்டும்" என்று உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications