முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மு.க.அழகிரியின் வலதுகரம்! திமுகவில் அரங்கேறும் அதிரடி மாற்றங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கன்னியாகுமரிக்கு சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலினை, பூங்கொத்து கொடுத்து மன்னன் வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மு.க.அழகிரியின் வலதுகரமாகவும், அவருக்கு எல்லாமுமாகவும் திகழக்கூடிய மன்னனின் இந்த நகர்வை கண்டு மதுரை உடன்பிறப்புகள் புருவம் உயர்த்தத் தொடங்கியுள்ளனர்.

மதுரை திமுக

மதுரை திமுக

ஒரு காலத்தில் மதுரை மாவட்ட திமுகவில் முக்கிய முகமாக கோலோச்சியவர் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாக அறியப்படும் அவர், அண்மையில் ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து பொன்னாடையும் அணிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் கன்னியாகுமரிக்கு சென்ற ஸ்டாலினை அங்கு வைத்து பார்த்திருக்கிறார் பி.எம்.மன்னன்.

ரியாக்‌ஷன் இல்லை

ரியாக்‌ஷன் இல்லை

மன்னனிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பெரிதாக எந்த ரியாக்‌ஷனும் வெளிப்படையாக காட்டவில்லையாம். ஒரு சிறு புன்னகையோடு அவரை அனுப்பி வைத்ததாக கூறுகிறார்கள் உள் விவரமறிந்தவர்கள். மு.க.அழகிரியின் யோசனைப் படியே இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை காட்டிலும் திமுகவில் நடைபெறவுள்ள உட்கட்சித் தேர்தலை மனதில் வைத்தே மன்னன் ஸ்டாலினை சந்தித்ததாக கூறப்படுகிறது.

நடக்காத காரியம்

நடக்காத காரியம்

மதுரை மாநாகர மாவட்டச் செயலாளர் பதவியை மன்னன் எதிர்பார்க்கிறாராம். தற்போது அந்தப் பதவியின் பொறுப்பாளராக மட்டும் இருக்கிறார் சீனியர் நிர்வாகியான பொன்.முத்துராமலிங்கம். இதனிடையே மன்னனை மீண்டும் கட்சியில் இணைப்பதே பெரிய விஷயம், இதில் அவர் பதவி எதிர்பார்ப்பதெல்லாம் நடக்காத காரியம் எனக் கூறுகிறார்கள் மதுரை உ.பி.க்கள்.

உட்கட்சித் தேர்தல்

உட்கட்சித் தேர்தல்

மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனை போலவே தமிழகம் முழுவதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள பலரும் மீண்டும் திமுகவில் இணைய காய் நகர்த்த தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தன்னை நம்பிய நிர்வாகிகள் அரசியலில் நிர்கதியாகி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், தனது தம்பி ஸ்டாலினை சந்திக்க விரும்புபவர்களை அழகிரி தடுப்பதில்லயாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+