Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையே முழிக்குது.. துரை அழகிரி "அக்கவுண்ட்" ஆரம்பம்.. "தோழரா? அஞ்சா நெஞ்சனா?".. கிளம்பிருச்சுப்பா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்மண்டல திமுகவில் புது எழுச்சி இனி தென்படும் என்று கனத்த நம்பிக்கையுடன் பூரித்து சொல்கிறார்கள் திமுகவின் உடன்பிறப்புகள்.. என்ன காரணம்?

கடந்த மார்ச் மாதம், அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து, உதயநிதி, தன் பெரியப்பா முக அழகிரியை நேரில் சந்தித்து ஆசி பெற்றிருந்தார்.. இந்த சந்திப்பின்போதே நிறைய அனுமானங்கள் வலம்வந்தன..

Madurai Dayanidhi Azhagiri and Are these the assignments assigned to Madurai MK Alagiri

உதயநிதி : ஒருவேளை உதயநிதியை முன்னால் அனுப்பிவைத்துவிட்டு, அதன்மூலம் தன்னுடைய ஆதரவையும் நெருக்கத்தையும் ஸ்டாலின் வெளிப்படுத்த முயல்கிறாரோ என்ற சந்தேகம் கிளப்பிவிடப்பட்டது.

அதுமட்டுமல்ல, கடந்த முறை மதுரை தொகுதிக்கு திமுகவிலேயே எத்தனையோ நபர்கள் முயன்றார்கள்.. ஆனால், கடைசி நேரத்தில், கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சிக்கு திமுக சீட் ஒதுக்கிவிட்டது. துணை மேயர் பதவியையும் எம்பி வெங்கடேசன் ஆதரவாளருக்கே பெற்று தந்துவிட்டதாகவும் ஒரு பேச்சும் உள்ளது.. ஏற்கனவே மதுரை திமுக உட்கட்சி பூசல் தலைவிரித்தாடிவரும் நிலையில், மீண்டும் மதுரையை அழகிரி தரப்பினர் கையில் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் திமுக மேலிடம் நினைப்பதாகவும் தெரிகிறது.

மறைந்த விரிசல்: இதனால், உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டுவருவதுடன், வளர்ந்து வரும் மதுரை பாஜகவையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் ஸ்டாலின் தரப்பு நம்புவதாக தெரிகிறது.

எனினும் அழகிரி - ஸ்டாலினின் நேரடி சந்திப்புகள் எதுவுமே நடைபெறாமல் இருந்த நிலையில், அது கடந்த ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது.. தயாளு அம்மாள் பிறந்தநாளின்போது, மொத்த குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்து கொண்டாடினார்கள். அப்போது முதல்வர் ஸ்டாலினும், அழகிரியும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார்களாம். இதை உதயநிதி ஸ்டாலினும் செய்தியாளர்களிடம் அப்போது உறுதிப்படுத்தியிருந்தார்.

அசைன்மென்ட்: இதையடுத்து, திமுகவில் தன்னை இணைத்து கொண்டுள்ள அழகிரியின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.. விரைவில் அழகிரிக்கு முக்கிய பொறுப்பு தரப்படும் என்றார்கள்.. குறிப்பாக, எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி கிடைத்தால், அது தென்மண்டல திமுகவுக்கு பலத்தை பெற்றுதருவதுடன், என்றும், தங்களுக்கும் பதவிகள் கிடைக்கும், என்று அழகிரியின் ஆதரவாளர்களும் நம்பியிருப்பதாக தெரிகிறது.

அதுமட்டுமல்ல, அழகிரிக்கு போஸ்டிங் கிடைத்தால், மதுரையின் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டுவருவதுடன், வளர்ந்து வரும் மதுரை பாஜகவையும் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளதாக தெரிகிறது.. அல்லது மதுரை தொகுதியில் தயாஅழகிரிக்கு எம்பி சீட் வழங்கப்பட்டாலும், அதுவும் தங்களுக்கு பிளஸ் ஆகவே அமையும் என்று கணக்கு போடுகிறார்கள்.

மூத்த அமைச்சர்கள்: இதனிடையே இன்னொரு தகவலும் கசிந்தது.. மூத்த அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகளால், கடும் அதிருப்தியில் இருக்கிறதாம் திமுக மேலிடம்.. எனவே, 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை "கவனிக்கும்" பொறுப்பை, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியிடம், முதல்வர் ஸ்டாலின் ஒப்படைக்க போவதாக சொன்னார்கள்..

காரணம், திமுகவில் அதிருப்தி எம்எல்ஏக்கள், 50க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்களாம்.. மாவட்ட வாரியாக சில அமைச்சர்கள், குறுநில மன்னர்களாகவும் செயல்பட்டு வருவதாக தெரிகிறது..

அவர்களுக்கு கீழேயே எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களாம்.. இதுதான், எம்எல்ஏக்களின் அதிருப்திகளுக்கு காரணமாக வெடித்துள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு கடிவாளம் போடுவதுடன், அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்களை கூல் செய்யவும், அவர்களின் பொருளாதார நெருக்கடிகளை தீர்த்து வைக்கவும், தலைமை முடிவு செய்தது.. அதனால்தான், மிகமிக முக்கியமான இந்த பொறுப்பை அழகிரியிடம் ஒப்படைக்க போவதாக சொன்னார்கள்.

அதிருப்திகள்: இதற்கெல்லாம் காரணம், எப்போதுமே அழகிரி அனைவருடனும் நெருங்கி பழகுபவர்.. அடிமட்ட தொண்டனும், மேலே உயர வேண்டும் என்று மனசார நினைப்பவர்.. எத்தனையோ தொண்டர்களை, இப்படி மேலே கைப்பிடித்து அழைத்தும் வந்திருக்கிறார்.. அதேசமயம், மரியாதையும் + பயமும் அழகிரியிடம் எப்போதுமே நிர்வாகிகளுக்கு உண்டு.. அதனால், அதிருப்திகளையெல்லாம் சரிக்கட்ட அழகிரியால் முடியும் என்று திமுக மேலிடம் இன்றுவரை நம்புகிறது.

அழகிரி மீது பாஜகவுக்கு நன்மதிப்பு உண்டு என்றாலும்கூட, தேர்தல் நெருங்குவதால், திமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் வளைக்க பாஜக முயற்சிக்கலாம்.. இந்த முயற்சிகளை முறியடிக்கவும், அழகிரியால் மட்டுமே முடியும் என்று முதல்வர் தரப்பு நினைக்கிறது.
துரை தயாநிதி: எனினும், அழகிரிக்கோ, அல்லது தயா அழகிரிக்கோ எந்த ஒரு பொறுப்பும், பதவியும் தரப்போவதாக இதுவரை எந்த உறுதியான தகவலும் வரவில்லை.. அதேசமயம், மதுரையில் துரைதயாவுக்கு ஆதரவான போஸ்டர்கள் களைகட்டுகிறது.

"2024 மதுரையின் நாயகனே வெல்க; நீ அஞ்சா நெஞ்சன் வீட்டுப்பிள்ளை, உன் விசுவாசிகள் தஞ்சம் போனதில்லை. தொண்டர்களின் தோழனே, தொடரட்டும் கழக சாதனை" என்று என மதுரை முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் அழகிரி விசுவாசிகள். துரை தயாநிதிக்கு சீட் வேண்டும் என்று சூசகமாக தலைமைக்கு இவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் இந்த போஸ்டர்கள் அமைந்துள்ளன

அஞ்சாநெஞ்சன்: ஆனால், இந்த முறையும் கூட்டணியில் மதுரைக்கு, எம்பி சீட்டை பெற்றுவிட வேண்டும் என்ற முயற்சியில் சிபிஎம் தீவிரமாக உள்ளதால், திமுக என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.. மதுரை எம்பி சீட் "தோழருக்கா? அஞ்சாநெஞ்சனுக்கா?" தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+