Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரைவாசிகளுக்கு நிம்மதி செய்தி வருதா? "ஜவ்வு" மாதிரி இழுக்குதே.. கப்பலூர் டோல்கேட் அகற்றப்படுகிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமங்கலம் கப்பலூர் டோல்கேட் விவகாரம் இழுபறியாகவே சென்றுகொண்டிருக்கும் நிலையில், இன்றைய தினமாவது ஏதாவது சுமூக முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
4 வழிச்சாலைகளை பொறுத்தவரையில், 60 கிமீ. தொலைவிற்குள் ஒரு டோல்கேட் இருக்க வேண்டும் என்பது தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் விதித்திருக்கும் விதிமுறையாகும். அதேபோல, அதுபோல், நகராட்சிக்குள் 10 கி.மீ, மாநகராட்சிக்குள் 10 கி.மீ, தொலைவிற்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என்றும் விதிமுறை உள்ளது.

ஆனால், தமிழகத்தில் உள்ள 4 வழிச்சாலைகளில் 11 இடங்களில் விதிமுறைகளை மீறி நான்கு வழிச்சாலைகளில் டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில்தான், மதுரை திருமங்கலம் கப்பலூரில் விதிமுறையை மீறி டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது..

Madurai Kappalur Toll Gate issue and Negotiations are going on again today regarding the Kappalur tollgate

சுங்கச்சாவடி: இந்த கப்பலூர் சுங்கச்சாவடியை கடந்துதான் நெல்லை, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வாகனங்கள் வரவேண்டி உள்ளது.. அதேபோல, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி போன்ற பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் மதுரைக்கு வந்து செல்கின்றன... அதேபோல, திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிப்பதாக தெரிய வருகிறது.

ஒரு முறை சென்று வருவதற்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக சொல்கிறார்கள். கப்பலூருக்கு முன் 50 கிமீ தொலைவிற்குள் திண்டுக்கல் சாலையில் இன்னொரு டோல்கேட் உள்ளது.

60 கிமீ அடிப்படையில், இந்த கப்பலூர் டோல்கேட் அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அகற்றப்படவில்லை. அதனால், திருமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார 50 கிராம மக்கள், இந்த டோல்கேட்டை அகற்ற வேண்டும் என்று பல வருடங்களாகவே போராட்டம் நடத்தி வருகிறார்கள்.. இந்த போராட்டத்திற்கு, தென்மாவட்டம் செல்லும் வாகன ஓட்டிகளும் ஆதரவு தந்து குரலெழுப்பி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, மதுரை ஒத்தக்கடைக்கு ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார்.. அப்போது, கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் முறையிட்டனர். அதற்கு ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததுமே, இந்த டோல்கேட் உறுதியாக அகற்றப்படும் என்று உறுதி தந்திருந்தார்.

டோல்கேட்: ஆனால், ஆட்சிக்கு வந்து 2 வருடமாகியும், அந்த டோல்கேட் ஏன் அகற்றப்படவில்லை? என்று அம்மக்கள் திமுக அரசை கேள்வி எழுப்புகிறார்கள்.. அதுமட்டுமல்ல, எத்தனையோ முறை முதல்வர் ஸ்டாலின், மதுரைக்கு வந்துபோயிருக்கிறார்.. ஆனால், ஒருமுறைகூட, கப்பலூர் டோல்கேட் அகற்றவது பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லையே, நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று பொதுமக்கள் வருத்தமாக சொல்கிறார்கள்.

இந்த கப்பலூர் டோல்கேட்டை அகற்றக் கோரி, மதுரை கோர்ட்டிலும், சுப்ரீம்கோர்ட்டிலும்கூட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.. அதேபோல, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, "விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டுகள் அகற்றப்படும்,, மாநில அரசுகளை அந்த டோல்கேட் குறித்த பட்டியலை அனுப்பும்படியும்" மத்திய சாலைப்போக்குவரவத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், அதுவும் என்ன ஆனது என்றே தெரியவில்லை..

சுங்கச்சாவடி : இதுகுறித்து அந்த பகுதி சொல்லும்போது, "கப்பலூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும்போதே எதிர்ப்பு சொன்னோம்.. அதற்கு, உள்ளூர் பகுதி மக்களுக்கு கட்டண சலுகைகள் அளிக்கப்படும் என்று சுங்கச்சாவடி ஒப்பந்தக்காரர்கள் சொன்னார்கள்.. ஆனால், உள்ளூர் மக்களுக்கு இதுவரை எந்தவித கட்டண விலக்கும் அளிக்கவில்லை. ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் போதும் கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக சொல்கிறார்கள்.. ஆனால் சொல்றபடி செய்வதில்லை" என்று குமறுகிறார்கள்.

அந்தவகையில், கப்பலூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 10 வருட காலமாகவே பிரச்சனை நீடித்து வருகிறது.. இதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளும் ஒவ்வொருமுறையும் தோல்வி அடைந்தபடியே உள்ளது.. இந்த பேச்சுவார்த்தைகளை, சில உயர்அதிகாரிகளே புறக்கணித்து விடுகிறார்களாம்.. பேச்சுவார்த்தையின் தொடர் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.

எகிறும் எதிர்பார்ப்பு: இந்நிலையில்தான், இன்று மறுபடியும் பேச்சுவார்த்தை நடக்கிறது.. ஆர்டிஓ சாந்தி தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையிலாவது உயர் அதிகாரிகள் பங்கேற்பார்களா? திருமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? கப்பலூர் டோல்கேட் அகற்றப்படுமா? தெரியவில்லை... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+