இதுதான் தரமான சம்பவம்.. வெறும் 3 மாதத்தில் மாற்றம்.. மதுரைக்கு அடித்த ஜாக்பாட்.. சத்தமின்றி புரட்சி!
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் இரு டைடல் பூங்காக்களுக்கு கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மதுரை மற்றும் திருச்சியில் அமைய உள்ள டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு, கடந்த பிப்ரவரி மாத காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
3 மாதங்களுக்குள் மதுரை டைடல் பார்க் பணிகள் துரிதம் அடைந்து உள்ளது. 30 சதவிகித கட்டுமானப் பணிகளை 18 மாதத்திற்குள் முடிக்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

மதுரையில் 345 கோடி செலவில் 640,000 சதுர அடி அமைக்கப்படும்
திருச்சியில் 350 கோடி செலவில் 630,000 சதுர அடி அமைக்கப்படும்
மதுரை ஐடி பார்க்
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக டைடல் பார்க் வரவுள்ளது. முதற்கட்டமாக 600 கோடி 5 ஏக்கரில் டைடல் பார்க் தொடங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் டைடல் பார்க் உருவாக்கப்படும். டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்
மதுரையில் அமைக்கப்பட உள்ள ஐடி பார்க்கிங் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இரண்டு டவர்கள் கொண்ட தலா 25 மாடிகள் கொண்ட கட்டிட மாதிரி உறுதி செய்யப்பட்டு கட்டுமானம் நடந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு கவனம்
தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக பெரிய ஐடி முதலீடுகள் வரவில்லை. அதை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது.
1996-2001ல் எந்த அடித்தளம் போடப்பட்டதோ அதை வைத்தே தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பிழைத்து வருகிறது. புதிய திட்டங்களின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் ஐடி துறையில் புதிய மாற்றங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக பெங்களூர், ஹைதராபாத் ஐடி துறையின் வேகத்தால் நாம் அடைந்த பின்னடைவை சரி செய்ய வேண்டும். முக்கியமாக பாரம்பரிய ஐடி தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஏஐ தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதை மனதில் வைத்து சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் ஐடி பார்க் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஐடி பார்க் முடிவு
அதன் அடிப்படையில், மதுரையில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மதுரையில் ஐடி பார்க் அமைப்பது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், தொழில் என்று வந்துவிட்டால் பெரிய தொழில் மட்டும் முக்கியமில்லை. சிறிய தொழிலும் முக்கியம்தான். அப்போதுதான் பரந்துபட்ட வளர்ச்சி ஏற்படும். பாண்டியன் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, தற்போது தொழில் வளர்த்த மதுரையாக உள்ளது. பரந்துபட்ட வளர்ச்சிதான் முக்கியம். ஒரு மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களும் முக்கியம்.
இதேபோல் திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமானம் 20 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது.
திருச்சியில் 350 கோடி செலவில் 630,000 சதுர அடி அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் இத்திட்டத்திற்காக 2023-24 பட்ஜெட்டில் மாநில தொழில் துறையும் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications