மதுரை டூ பெங்களூர் வந்தே பாரத் ரயில்.. டிக்கெட் எவ்வளவு? நின்று செல்லும் இடங்கள் எவை? முழு விவரம்
சென்னை: மதுரை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் எங்கெல்லாம் நின்று செல்லும்? இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் எவ்வளவு? எத்தனை மணிக்கு புறப்படும்? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மதுரையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ஐடி தலைநகரான பெங்களூருக்கு தமிழகத்தில் இருந்து தொழில், பணி காரணங்களுக்காக ஏராளமான பயணிகள் சென்று வருகிறார்கள். குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் பெங்களுருக்கு பயணம் செய்கிறார்கள்.

எப்போது புறப்படும்?: இதனால், மதுரை, திருச்சியில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கபப்ட வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பயணிகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் ( வண்டி எண்; 20671), திண்டுக்கல்லுக்கு காலை 5.59 மணிக்கும், திருச்சிக்கு 6.50 மணிக்கும், கரூருக்கு 8.08 மணிக்கும், நாமக்கல்லுக்கு 8.32 மணிக்கும், சேலத்திற்கு 9.15 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்திற்கு மதியம் 12.50 மணிக்கும், 1 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்து சேரும்.
எத்தனை நாட்கள் இயங்கும்: மறுமார்க்கத்தில், பெங்களூர் கண்டோன்மெண்டில் இருந்த பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்: 20672) கிருஷ்ணராஜபுரத்திற்கு 1.35 மணிக்கு வந்து சேரும். சேலத்திற்கு மாலை 4.50 மணிக்கும், நாமக்கல்லுக்கு 5.38 மணிக்கும், கரூருக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு இரவு 7.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 8.28 மணிக்கும், மதுரைக்கு 9.45 மணிக்கும் வந்தடையும்.
இந்த வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகள் கொண்டது ஆகும். செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படுகிறது. திருச்சி, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் 5 நிமிடங்கள் நின்று செல்லும். இதர ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும்.
கட்டணம் எவ்வளவு?:
* பெங்களூர் - மதுரை (சேர்கார் கட்டணம் - ரூ.1,740) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ரூ.3,060)
* பெங்களூர் - திண்டுக்கல் (சேர்கார் - ரூ.1,645) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,870)
* பெங்களூர் - திருச்சி (சேர்கார் - ரூ.1,250) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,270)
* பெங்களூர் - கரூர் (சேர்கார் - ரூ.1,130) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,020)
* பெங்களூர் - நாமக்கல் (சேர்கார் - ரூ.1,085) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,925)
* பெங்களூர் - சேலம் (சேர்கார் - ரூ.1,000) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,750)
* மதுரை - திண்டுக்கல் (சேர்கார் - ரூ.440) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.825)
* மதுரை - திருச்சி (சேர்கார் - ரூ.555) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,075)
* மதுரை - கரூர் (சேர்கார் - ரூ.795) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,480)
* மதுரை - நாமக்கல் (சேர்கார் - ரூ.845) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,575)
* மதுரை - சேலம் (சேர்கார் - ரூ.935) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,760)
* மதுரை - கே ஆர் புரம் (சேர்கார் - ரூ.1,555) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ2,835)
* மதுரை - பெங்களூர் (சேர்கார் - ரூ.1,575) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ. 2,865).












Click it and Unblock the Notifications