சென்ற இடமெல்லாம் எதிர்ப்பு! ஒரு காலத்துல கெத்தா இருந்தாங்க.. மரகதம் குமரவேலுக்கு இந்த நிலைமையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொகுதியில் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த, மதுராந்தகம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான மரகதம் குமரவேல் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் விஜய் பிரச்சாரம் செய்த பிறகும் தொடர்ந்து அவருக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு எதிராக முழக்கங்கள் எடுக்கப்படுவதால் போலீஸ் பாதுகாப்புடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சில இடங்களில் பொதுமக்கள் அவரை விரட்டியடித்த சம்பவங்களும் அரங்கேறி உள்ளதால் கலக்கத்தில் உள்ளனர் தவெகவினர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செண்டிவாக்கம் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரவித்து பொதுமக்கள் காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

by election 2026 Madurantakam tvk

மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக அவர் நேற்று செண்டிவாக்கம் கிராமத்திற்குப் பிரச்சாரத்திற்காக வரவிருந்தார்.

வேட்பாளரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் ஆய்வுப் பணிகளுக்காகக் காவல்துறை வாகனம் ஒன்று கிராமத்திற்குள் முன் கூட்டியே வந்தது. அப்போது அங்குத் திரண்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திடீரெனக் காவல்துறை வாகனத்தைச் சூழ்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேலும் எங்கள் கிராமத்திற்குள் காவல்துறை வாகனமும் வரக்கூடாது பிரச்சாரத்திற்காக வேட்பாளரும் உள்ளே நுழையக் கூடாது என்று உரக்கக் கோஷமிட்டவாறு காவல்துறை அதிகாரிகளுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

கிராம மக்களின் இந்த அதிரடி எதிர்ப்பால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை ஏற்படுத்தவும் முயற்சித்தனர். ஆனால் அது பலனளிக்காததால் அங்கிருந்து அமைதியாகக் கிளம்பினார் மரகதம் குமரவேல்.

இதேபோல், மதுராந்தகம் அருகே மொரப்பாக்கம், தண்டலம், பெரும்பாக்கம், கழனிபாக்கம் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது பெரும்பாக்கம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது அந்த கிராமத்தைச் சேர்ந்த சில நபர்கள் வேட்பாளர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அங்கிருந்த காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த நபர்களை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்.

மேலும் தகவல் அறிந்த சில நபர்கள் அந்த வானத்தை முன்பு நின்று போராட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பிரச்சாரம் செய்ய வந்த மரகதம் குமரவேல் அவர்கள் அந்தப் பகுதியில் பிரச்சாரம் செய்த பிறகு கிளம்பி சென்றார். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த நபர்களை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றியதால், அங்குள்ள சில நபர்கள் வாகனத்தை வழிமறித்து தொடர்ந்து போராட்டம் செய்தனர். இதனால், அந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+