விஜய்க்காகத்தான் இந்த ஓட்டு.. மதுராந்தகம் தொகுதியைக் கைப்பற்றிய மரகதம் குமரவேல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவிய நிலையில், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த இடைத்தேர்தலில் விழுந்த வாக்குகள் முழுவதும் முதல்வர் விஜய்க்காகத் தான் விழுந்தது என்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்தது. அதிமுகவில் 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். முதல்கட்டமாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைதேர்தல் கடந்த 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

madurantakam-by-election-every-vote-was-for-cm-vijay-says-maragatham-kumaravel

தவெக தொடர் முன்னிலை

அதிமுகவில் ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்தியபாமா தவெக வேட்பாளர்களாக மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் களமிறங்கியிருந்தனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் தவெக இருந்தது. மறுபக்கம் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது அதிமுகவுக்கு கௌரவ பிரச்சனையாக இருந்தது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாதக சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட சுகந்தி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே அனைத்துக் கட்சியையும் பின்னுக்குத் தள்ளி மரகதம் குமரவேல் முன்னிலையில் இருந்தார்.

விஜய்க்காக விழுந்த வாக்குகள்

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளர் பரந்தாமனைவிட 19,000 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். இதைத்தொடர்ந்து, மரகதம் குமரவேல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

இந்த இடைத்தேர்தலில் விழுந்த வாக்குகள் அனைத்தும் முதல்வர் அண்ணன் தளபதி விஜய்க்காக விழுந்த வாக்குகள். முதல்வர் விஜய் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று விஜய் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+