“எவ்ளவோ பார்த்தாச்சு.. இன்னும் பத்தல”.. சொத்துக் கணக்கை கேட்டு திமுகவுக்கு விஜய் போட்ட சவால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து தொழுப்பேடு, ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் முதல்வா் விஜய் உரையாற்றினார். அப்போது, அரசியலுக்கு வருவதற்கு முன்பு உங்கள் சொத்துக் கணக்கு எவ்வளவு, அரசியலுக்கு வந்த பிறகு சொத்துக் கணக்கு எவ்வளவு என்று காட்ட முடியுமா என்று முதல்வர் விஜய் சவால் விட்டுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட்கள் என ஐந்து முனைப் போட்டி நிலவி வருகிறது. தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Madurantakam By Election

விஜய் பிரசாரம்

அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன. சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தற்போது தவெக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து தொழுப்பேடு, ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் முதல்வா் விஜய் பேசியதாவது: முதலமைச்சராக நான் இங்கு வரவில்லை, உங்கள் வீட்டு பிள்ளையாக, தம்பியாக வந்திருக்கிறேன். ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா?. தவெக ஆட்சிக்கு வரக் கூடாதா. நாட்டில் ஆபாச நதி ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆபாச பேச்சை ஆதரிப்பதா

திமுக ஏன் ஆபாசமாக பேசுகிறது. ஜெயலலிதாவை அன்று ஸ்டாலின் அவதூறாக பேசினார். ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இப்படிதான் பேசுகிறார்கள். திமுகவுக்கு வாக்களித்தால் ஆபாச பேச்சை ஆதரிப்பதாகிவிடும். ஆபாசமாக பேசுவோருக்கு தண்டனை கொடுங்கள். இந்த இடைத்தேர்தல் என் தங்கை மரகதம் குமரவேலுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இந்த விஜய் 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஊழலை எல்லாம் 50 வயதுக்குள் இருப்பவர்களுக்குத் தெரியாதே. இன்றைய தலைமுறையினருக்கு இதனைப் பற்றி தெரியாதே. ஆனால், இந்த விஜய் பழைய கதையை எல்லாம் எடுத்துக் கொண்டு வருகிறானே என்று தான் நம்மைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றனர். திக் ஸ்கின் என்று சொல்வார்களே கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அதற்கு உலகத்தில் உள்ள ஒரே எடுத்துக்காட்டு நான் தான்.

சொத்துக் கணக்கு சொல்ல முடியுமா

34 ஆண்டுகளாக எல்லா விஷயத்தையும் பார்த்துவிட்டு தான் அரசியலுக்குள் வந்திருக்கிறேன். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் எனக்கு இன்னும் பத்தவில்லை. நிறைய எதிர்பார்க்கிறேன் என்று தான் தோன்றுகிறது. ஸ்டாலினுக்கும், திமுகவுக்கு சொல்வது ஒன்றுதான் ஊழல் செய்த கூட்டத்தை விடவே மாட்டோம். இனி தமிழக மக்களை ஏமாற்ற விடவும் மாட்டோம், ஏமாற்ற விடவும் போறதில்லை. ஒருநாளும் எங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்த மாட்டோம்.

இதற்கு முன்பு மக்கள் காசை தொட்டதில்லை என்று சொல்ல முடியுமா, அல்லது தொடமாட்டோம்னு சொல்ல முடியுமா. நாங்கள் ஊழலே செய்ததில்லை, அல்லது செய்ய மாட்டோம் என்று உங்களால் சொல்ல முடியுமா. அரசியலுக்குள் வருவதற்கு முன்பு உங்கள் சொத்துக் கணக்கு எவ்வளவு, அரசியலுக்கு வந்த பின்னர் உங்கள் சொத்துக் கணக்கு எவ்வளவு என்று சொல்ல முடியுமா என்று கேட்டு முதல்வர் விஜய் சவால் விட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+