மதுராந்தகத்தில் மாஸ் காட்டப் போவது யார்! 2026 சட்டசபை தேர்தல் நிலவரம் என்ன? இப்போ களத்தில் யார்?
சென்னை: மதுராந்தகம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில், கடந்த தேர்தலின் போது பதிவான வாக்குகள், களத்தில் இருந்த வேட்பாளர்கள், அவர்கள் பெற்ற வாக்குகள், தற்போதைய தேர்தலின் நிலை என்ன? என்பது குறித்து சற்று சுருக்கமாக பார்க்கலாம்.
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பழத்தோட்டம் பகுதியில் உள்ள சமூகம மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம் வளாகத்தில் நடைபெறுகிறது.

அங்கு, 70 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், 54 சிசிடிவி கேமரா மூலம் காண்காணிப்பு நடைபெறுகிறது. 14 மேஜைகளில் 21 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தபால் வாக்கு: PwD - 480 ல் 459 பெறப்பட்டது, 85+ - 451 ல் 434 பெறப்பட்டது. தற்போதைய தேர்தலில், 285 வாக்குச்சாவடிகளில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 423 வாக்குகள் பதிவாகி உள்ளது. 86.26 சதவீதம் என்பது குறுப்பிடத்தக்கது. இது ஆண்கள் 91,131. - 86.85%, பெண்கள்: 93258. - 85.72%, மூன்றாம் பாலினம்: 34 - 52.31% என என மொத்தம்: 1,84,423. 86.26 சதவீதமாக உள்ளது.
2026 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலின் போது, ஆண்கள்: 1,04,926, பெண்கள்: 1,08,797, மூன்றாம் பாலினம்: 65
என மொத்தம்: 2,13,788 வாக்காளர்கள் வாக்களித்தனர். கடந்த முறை அதிமுக வெற்றி பெற்றது 7,194 வாக்குகள் வித்தியாசம் என்ற நிலையில் கடந்த முறையை விட தற்பொழுது வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், கடந்த தேர்தல் முடிவுகளை சுருக்கமாகப் பார்க்கலாம். கடந்த சட்டசபை தேர்தலல் இந்த தொகுதியில் அதிமுகவே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது மதுராந்தகம் தனி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேலும், திமுகவின் அமுலு பொன்மலரும், தமிழக வெற்றிக் கழகத்தின் எழில் கேத்தரின், நாம் தமிழரின் ஜானகிராமனும் களம் இறங்கினர்.
1 லட்சத்து 96 ஆயிரம் வாக்குகள் பதிவான நிலையில் மரகதம் குமரவேல் 69 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் எழில் 62,000 வாக்குகளும், திமுக வேட்பாளர் அமலு பொன்மலர் 59 ஆயிரம் வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் ஜானகிராமன் 4,950 வாக்குகளும் பெற்றனர்.
தற்போதைய தேர்தலில், மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரகதம் குமரவேல், திமுக தரப்பில் பரந்தாமன், அதிமுக தரப்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் சார்பில் ஜானகிராமன் களமிறங்கியுள்ளனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றார். இதனால் தற்போது களத்தில் 27 வேட்பாளர்கள் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
