அனல் பறக்கும் இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து தவெக நிர்மல்குமார் காட்டம்

Subscribe to Oneindia Tamil

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தவெக அமைச்சர் நிர்மல்குமார், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்ததுடன், தமிழகத்தில் அடுத்தடுத்து பல இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திமுகவும் இதே நிலையை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது.

madurantakam-bypoll-tvk-s-nirmal-kumar-criticises-eps-says-more-bypolls-will-follow

தீவிர பிரசாரம்

இந்த இரண்டு தொகுதிகளும் அதிமுகவின் சிட்டிங் தொகுதியாக இருந்தது. அந்த கட்சி எம்எல்ஏவாக இருந்தவர்களே ராஜினாமா செய்து தவெக வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். அதனால் தவெகவை தோற்கடிக்க அதிமுக பணியாற்றுகிறது. தவெகவை வீழ்த்தி தங்களின் செல்வாக்கை நிரூபிக்க முன்னாள் அமைச்சர்கள் படையுடன் திமுக வேகம் காட்டுகிறது.

கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் கட்சியினரும் தங்கள் பலத்தை காட்டுவதற்காக களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது. முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக எடப்பாடி பழனிசாமி, சிபிஎம் சண்முகம், நாம் தமிழர் சீமான் உள்ளிட்டோர் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்துள்ளனர்.

பல இடைத்தேர்தல் வரும்

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த தவெக அமைச்சர் நிர்மல்குமார், தமிழகத்தில் அடுத்தடுத்து பல இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: இன்னும் அடுத்தடுத்த பல இடைத்தேர்தல்கள் வரும். எடப்பாடி பழனிசாமி மாதிரியான ஒரு தலைவர் தன்னுடைய கொள்கைக்கும், எம்ஜிஆர், ஜெயலலிதா அரசுக்கு எதிராக செயல்பட்டதே இதற்கு காரணம். தலைமைக் கழகத்திற்கு செல்லும்போது அங்குள்ள அண்ணா சிலைக்கும், எம்ஜிஆர் சிலைக்கும் சென்று மரியாதை செலுத்திகிறீர்கள். அப்படி செல்லும்போது ஒருமுறை யோசித்துப் பாருங்கள். திமுகவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்.

எடப்பாடியை விடக்கூடாது

உண்மையான அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்துக்குள்ளேயே விடக் கூடாது. எம்ஜிஆர் தனது சொந்த செலவில் கட்டிய தலைமைக் கழகத்துக்குச் செல்லும் அருகதை எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. திமுகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இதே நிலைமைக்கு திமுகவும் செல்லும். அடுத்தடுத்து பல இடைத்தேர்தல்கள் வரும்.

இந்த மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி இன்னும் பல ஆண்டுகளுக்கு, பல தேர்தல்களுக்கு சிறப்பாக செல்லும். கூட்டணி ஆட்சி அமையும் என்று விக்கிரவாண்டியில் கூறிய வார்த்தையை முதல்வர் விஜய் இன்று காப்பாற்றியுள்ளார் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+