எடுபடாத ’குதிரை பேரம்’ குற்றச்சாட்டு.. கைகொடுக்காத தலைவர்கள் பிரச்சாரம்! கோட்டை விட்ட திமுக - அதிமுக
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தாராபுரம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இரு தொகுதிகளையும் கைப்பற்றி முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சாதனை படைத்துள்ளது. இந்த தேர்தலில் குதிரை பேரம் உள்ளிட்ட பல முக்கிய குற்றச்சாட்டுகளை திமுக -அதிமுக முன்வைத்து, முக்கிய தலைவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்த நிலையிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக , நாதக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போட்டியிட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா மற்றும் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேல் ஆகியோர் தொடர்ந்து முன்னிலையில் இருந்தனர். மேலும் இந்த சட்டமன்ற தவெக இரு தொகுதிகளிலும் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தவெகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். தற்போது அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள மரகதம் குமரவேல், சத்யபாமா ஒரு மீண்டும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
திமுக தரப்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிட்டனர். அதிமுக தரப்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் போட்டியிட்டர். இதைப் போல மதுராந்தகத்தில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் நாம் தமிழர் கட்சி சார்பிலும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணனும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தியும் போட்டியிட்டனர்.
இதனால், இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் மிகுந்த விமர்சனத்துக்குள்ளானதும் எதிர்ப்பை பெற்றதும் அதிமுக வேட்பாளர்கள் தான். அதிமுகவிலிருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததால் குதிரை பேரும் நடத்தப்பட்டதாக திமுக அதிமுக பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. மேலும் ஆளும் கட்சிக்கு எதிராக அந்த கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளும் கடும் விமர்சனத்தை முன் வைத்தன.
போதாக்குறைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை பிரச்சாரத்தில் வெளுத்தெடுத்தார். இது மட்டுமல்லாமல் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு, எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என பலரும் தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மேலும் வாக்குக்கு பணம் கொடுத்ததாக புகார்களும் முன்வைக்கப்பட்டது. ஆனால் எல்லா சர்ச்சைகள் புகார்களையும் தாண்டி தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் தற்போது இந்நாள் எம்எல்ஏக்களாக மாறி இருக்கின்றனர். இதன் மூலம் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குதிரை பேரம் குற்றச்சாட்டு எடுபடவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.




Click it and Unblock the Notifications
