2 தொகுதிகளையும் தட்டி தூக்கிய விஜய்.. தவெக பலம் 109 ஆக உயர்வு.. தனி மெஜாரிட்டியை நெருங்குகிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இரண்டு இடங்களிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், இரு தொகுதிகளையும் தவெக கைப்பற்றி தனது அரசியல் பலத்தை மேலும் நிரூபித்துள்ளது.

Dharapuram Madurantakam TN By Polls 2026

இடைத்தேர்தல் பின்னணி

கடந்த பொதுத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள்தான் வெற்றி பெற்றிருந்தனர்:

மதுராந்தகம்: கே. மரகதம் குமரவேல் (அதிமுக)
தாராபுரம்: பி. சத்யபாமா (அதிமுக)

பின்னர் இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் காலியான அவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

களத்தில் வென்ற வேட்பாளர்கள்

பலமுனைப் போட்டி நிலவிய இத்தேர்தலில், மதுராந்தகத்தில் 27 வேட்பாளர்களும் தாராபுரத்தில் 22 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

தவெக: அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களான கே. மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் பி. சத்யபாமா (தாராபுரம்) ஆகியோரே மீண்டும் களமிறக்கப்பட்டு தற்போது அபார வெற்றி பெற்றுள்ளனர்.

எதிர்க்கட்சிகள்: திமுக சார்பில் மதுராந்தகத்தில் போட்டியிட்ட இ. பரந்தாமன் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ். கணிதா சம்பத் உள்ளிட்ட பிரதான வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் போட்டியிட்ட நிலையில் பாமக நடுநிலை வகித்தது.

தாராபுரம் தொகுதி வாக்கு நிலவரம்:

பி. சத்தியபாமா (தவெக): 66841வாக்குகள்
எஸ். சுகன்யா (திமுக): 57370 வாக்குகள்
க. பானுமதி (அதிமுக): 45280 வாக்குகள்
கார்த்திகா (நாம் தமிழர் கட்சி): 5268 வாக்குகள்
லட்சுமணன் (சிபிஐ): 1157 வாக்குகள்


மதுராந்தகம் தொகுதி வாக்கு நிலவரம்:

கே. மரகதம் குமரவேல் (தவெக): 72240 வாக்குகள்
இ. பரந்தாமன் (திமுக): 52098 வாக்குகள்
எஸ். கணிதா சம்பத் (அதிமுக): 46356 வாக்குகள்
ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி): 2298 வாக்குகள்
பி. சுகந்தி (சிபிஎம்): 1701 வாக்குகள்

சட்டமன்ற பலம்: புதிய நிலவரம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்த இடங்கள் 234. இதில் அறுதிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.

இடைத்தேர்தலுக்கு முன் சட்டமன்றத்தில் 7 தொகுதிகள் காலியாக இருந்தன (மொத்த எம்.எல்.ஏ-க்கள்: 227). ஆளும் தவெக தனித்து 107 இடங்களுடன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் இருந்தது.

இன்றைய இரட்டை வெற்றிக்குப் பின் சட்டமன்ற நிலவரம்:*

தவெக: 2 தொகுதிகளையும் கைப்பற்றியதன் மூலம் தவெகவின் சொந்த பலம் 107-லிருந்து 109 ஆக உயர்ந்துள்ளது. இது ஆளும் கட்சி தனி மெஜாரிட்டியான 118-ஐ எட்டுவதற்கான தூரத்தைக் குறைத்துள்ளது.

திமுக: எதிர்க்கட்சியான திமுக கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்பை இழந்து, தனது பலத்தை 59 என்ற அளவிலேயே தக்கவைத்துள்ளது.

அதிமுக: தன்வசம் இருந்த 2 தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்ற முடியாமல் 47 எம்.எல்.ஏ-க்களுடன் நீடிக்கிறது.

காலியிடங்கள்: தற்போது 7-லிருந்து 5 ஆகக் குறைந்துள்ளது.

அரசியல் முக்கியத்துவம்

இந்த இரட்டை வெற்றி மூலம், தவெக அரசு மீதான மக்கள் ஆதரவும் தேர்தல் அங்கீகாரமும் களத்தில் மீண்டும் உறுதியாகியுள்ளது. மாற்றுக்கட்சிகளிலிருந்து இணைந்த வேட்பாளர்களை மீண்டும் வெற்றிபெற வைத்ததன் மூலம், ஆளும் தமிழக வெற்றிக் கழகம் தனது செல்வாக்கை வலுவாக நிலைநாட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+