மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக, அதிமுகவிற்கு இது வெற்றிகரமான தோல்வி! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தவெகவிடம் திமுகவும் அதிமுகவும் தோல்வி அடைந்தாலும் இரு கட்சிகளுக்கும் இது ஒன்றும் அவ்வளவு படுமோசமான தோல்வி இல்லை. சொல்லப்போனால் இது வெற்றிகரமான தோல்விதான். விஜய் இரண்டு தொகுதியிலும் சேர்த்து 4 நாட்கள் தீவிர பிரசாரம் செய்த போதிலும், திமுகவும், அதிமுகவும் டெபாசிட்டை தக்க வைத்துள்ளன.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்ற மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் வென்ற சத்தியபாமாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

Maduranthakam and Dharapuram by elections DMK and AIADMK this is a successful defeat

அதிமுக, திமுகவுக்கு படுமோசமான தோல்வியில்லை

குதிரை பேரம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் மீண்டும் இருவருமே தவெக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் 72,103 வாக்குகள் பெற்ற மரகதம் குமரவேல் 20,303 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல தாராபுரத்தில் தவெக சார்பாக போட்டியிட்ட சத்தியபாமா 66,481 வாக்குகள் பெற்று 9,471 வாக்குகள் வித்தியாச்த்தில் வெற்றி பெற்றார்.

இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றியை பதிவு செய்தாலும் திமுக, அதிமுகவிற்கும் இந்த படு மோசமான தோல்வியாக கருத முடியாது. ஏனெனில், விஜய் அலையில் தாக்குப்பிடிக்க முடியாது. எதிர்க்கட்சிகள் டெபாசிட் கூட வாங்காது என்று தவெகவினர் நம்பினர். ஆனாலும் இந்த இரண்டு தொகுதிகளிலுமே தவெகவை திமுகவும் அதிமுகவும் தண்னி குடிக்க வைத்தது என்றே சொல்லலாம்.

வெற்றிகரமான தோல்வி

தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் இரண்டாம் இடம் பெற்ற பெற்றது திமுக. மதுராந்தகத்தில் 59,838 வாக்குகளை திமுகவின் பரந்தாமன் பெற்றார். அதேபோல அதிமுக சார்பாக போட்டியிட்ட கணிதா சம்பத் 69,284 வாக்குகளும் பெற்றுள்ளார். தாராபுரத்தில் திமுக 57,370 வாக்குகளும், அதிமுக 45,280 வாக்குகளும் பெற்றது. இரண்டு தொகுதிகளிலும் திமுகவும் அதிமுகவும் தோற்றாலும் கூட இதை வெற்றிகரமான தோல்வி என்றே பார்க்கலாம்.

டெபாசிட் இழந்த நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள்

மதுராந்தகம், தாராபுரத்தில் ஐந்து முனை போட்டி நிலவியது. இதில் திமுகவும், அதிமுகவும் டெபாசிட்டை தக்க வைத்துக்கொண்ட நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் டெபாசிட்டை பறிகொடுத்தன. மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி 2,064 வாக்குகள் மட்டுமே பெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் 4,950 வாக்குகள் பெற்றன. தாராபுரத்தில் நாம் தமிழர் இந்த தேர்தலில் 5,268 வாக்குகள் பெற்றுள்ளது.

மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1,827 வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1,627 வாக்குகள் பெற்றுள்ளன. சட்டசபை தேர்தலில் ஒரு வேட்பாளர் டெபாசிட் தொகையைத் தக்கவைக்க, அந்தத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் குறைந்தது 6 பங்கில் ஒரு பங்கு வாக்கை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+