மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்காதவர்களுக்கு நாளை முதல் செம சான்ஸ்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத்தொகை பெற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 7 ஆம் தேதியான நாளை முதல் இந்த முகாம் தொடங்கும் நிலையில், பெண்கள் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் இருந்து ரூ.1000 கிடைக்க உள்ளதாக தெரிகிறது.

மகளிர் உரிமைத் தொகை பெற நாளை (ஜூலை 7) முதல் விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு நடைபெறும் பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Magalir Urimai Thogai 1000 Applications Only Through Ungaludan Stalin Camps

சிறப்பு முகாம்கள்

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த முகாமை தொடங்கி வைக்கிறார். அதேநேரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் பத்தாயிரம் இடங்களில் இந்த முகாம் நடக்கும். ஊராட்சி வாரியாக அனைத்து பகுதிகளிலும் இந்த முகாம் நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நவம்பர் மாதம் இறுதி வரை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடக்கும். எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை எல்லாம் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உடனே ரெடி ஆகுங்க

அதனால், உரிமைத்தொகை பெற ஆவணங்கள் ஏதேனும் இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து, அதனை அரசிடமிருந்து பெற்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் முதல் கட்ட விரிவாக்கம் செப்டம்பர் மாதத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

இதில் ஏற்கனவே விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் தகுதியான பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பெண்கள், மகளிர் உரிமைத்தொகை பெற இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தளர்வுகள்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெறுவதற்கான நிபந்தனைகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் திட்டத்தில் சேர தவறிய தகுதியான பெண்கள் மீண்டும் வாய்ப்பு பெறுவார்கள்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத் தண்டுவடம்/ தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து. முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறணணிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள். இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+