விஜய்யால் மகளிர் உரிமை தொகை ரூ.1000 கட்? சோகத்தில் தமிழக மக்கள்

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் மாதந்தோறும் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், இந்த மாதம் பணம் கிடைக்குமா என்ற கேள்வி ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பப் பெண்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அரசு அமையாததால், அரசு இயந்திரம் தற்காலிகமாக முடங்கியுள்ளது. இதனால் அரசின் நிதி விடுவிப்புக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் இல்லாத நிலை உருவாகியுள்ளது. தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரின் உத்தரவின் பேரிலேயே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மகளிர் உரிமை தொகைக்கான பணத்தை விடுவிக்க ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஒப்புதல் அளிப்பாரா அல்லது அதற்குள் விஜய் ஆட்சியை பிடிப்பார என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

Vijay TVK Magalir Urimai Thogai Magalir Urimai Thogai update 1000 2500 2026 1000 Magalir Urimai Thogai status check online Magalir Urimai Thogai apply Online Magalir Urimai thogai Helpline Number Magalir Urimai Thogai apply online 2026 Magalir Urimai Thogai not received this month Magalir urimai thogai website Magalir Urimai Thogai status check online with ration card Number Magalir Urimai Thogai status check online with Aadhaar number

பழைய அரசு கலைக்கப்பட்டதால் நிதி தாமதம்

மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படுவரில் பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தால் தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் அரசு முன்கூட்டியே திட்டமிட்டு கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு முன்பணமாக ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

ஆனால், தற்போது பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டுவிட்டது. புதிய முதலமைச்சர் இன்னும் பதவியேற்காததால், கோப்புகளில் கையெழுத்திட்டு நிதியை விடுவிக்க அதிகாரம் யாருக்கும் இல்லை. இதனால், வழக்கமான 15-ம் தேதி தொகை வரவு சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் மகளிர் உரிமை தொகை விடுவிக்க அதிகாரம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்காத பட்சத்தில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கைக்கு வர உள்ளது.

மக்கள் எதிர்பார்ப்பு உச்சத்தில்

கோடிக்கணக்கான பெண்கள் மாதந்தோறும் இந்தத் தொகையை நம்பி குடும்பச் செலவுகளை சமாளித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம், இந்தத் திட்டத்தையும் பாதித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை மட்டும் அல்லாமல் தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளிட்டவை இந்த மாதம் கிடைக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் வாக்குறுதி - ரூ.2,500 உயர்வு சாத்தியம்

விஜய் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். எனவே, தற்போதைய ரூ.1,000 திட்டத்தை அப்படியே தொடராமல், அதை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க விஜய் விரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு விஜய் முதலில் ஆட்சிக்கு வர வேண்டும்.

இருப்பினும், மாநிலத்தின் நிதிநிலைமையை கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவாரா அல்லது சில மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்வாரா என்பது, விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகே தெளிவாகும்.

மக்கள் கவலை தீர்க்க வேண்டிய கட்டாயம்

தற்போதைய அரசியல் சூழலில், மகளிர் உரிமைத் தொகை தொடருமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. ஏற்கனவே பல குடும்பங்கள் இந்தத் தொகையை நம்பி இருக்கும் நிலையில், தாமதம் ஏற்பட்டால் அவர்களின் வாழ்க்கை மேலும் சிரமமடையும்.

மக்களின் இந்த எதிர்பார்ப்பை உணர்ந்து, விரைவில் அரசியல் தலைவர்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தச் சூழலில், புதிய அரசு அமைந்த உடனேயே மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+