விரைவில் மகளிர் உரிமைத்தொகை.. அதுக்கு முன்னாடி புது ரேஷன் கார்டு.. வீடு தேடி வரப்போகும் குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. புதிய மகளிர் தொகை விண்ணப்பங்கள் எப்போது வேண்டுமானாலும் சேர்க்கப்படலாம் என்பதால் இந்த பணிகள் வேகமாக நடந்து வருகிறதாம்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் பல லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இப்படி தமிழ்நாட்டில் புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிதாக குடியேறியவர்கள், தனி வீடு பிரிந்தவர்கள் பலர் ரேஷன் கார்டுகளை வாங்க தொடங்கி உள்ளனர். இப்படி ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்தவர்கள் ஒருவர் இருவர் இல்லை. மொத்தமாக 2.80 லட்சம் பேர். இதில் இதுவரை ரேஷன் கார்டு வழங்கப்படாத மீதம் உள்ள ரேஷன் கார்டுகள் அடுத்த 2 வாரங்களில் பெரும்பாலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ration

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் தற்போது வரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில் 50-60 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. மீதம் உள்ள பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.

ரேஷன் கார்டில் இருந்து பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் செய்வதற்கு புதிய முறை கடைபிடிக்கப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சில தாமதங்கள் ஏற்பட்டன. இந்த தாமதங்கள் களையப்பட்டு.. தற்போது ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் விண்ணப்பங்களை மேற்கொண்டு 1 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கப்படாமல் போனதற்கு காரணம் லோக்சபா தேர்தல். லோக்சபா தேர்தல் விதிகள் காரணமாக ரேஷன் கார்டுகளை கொடுக்க முடியவில்லை. அதன் சரிபார்ப்பு பணிகளை செய்ய முடியவில்லை.

இப்போது அதெல்லாம் முடிந்து ரேஷன் கார்டுகளை கொடுக்கப்பட்டு வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகின்றன. ஆனாலும் இன்னும் பலருக்கு ரேஷன் கார்டுகளை வழங்கவில்லை.. புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்யவில்லை என்று புகார்கள் உள்ளன.

புதிய முறை: இந்த நிலையில் ரேஷன் கார்டில் இருந்து பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் செய்வதற்கு புதிய முறை கடைபிடிக்கப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

1. புதிய முறைப்படி ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்க வேண்டும் என்றால் அதற்கான ஆவணங்களை கொடுக்க வேண்டும்.

2. உதாரணமாக திருமணம் ஆகி, பெயர் நீக்கி புதிய ரேஷன் பெற.. அவர்கள் திருமண சான்றிதழ் கொடுக்க வேண்டும் .

3. இறப்பு காரணமாக பெயர் நீக்கம் செய்ய சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

4. தவறாக நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க நேரடி சோதனை செய்யப்பட வேண்டும். நேரடியாக சோதனை செய்து.. அந்த நபர் உள்ளார் என்பது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பெயர் சேர்க்கப்படும்.

ஆனால் இந்த புதிய முறைப்படி கார்டுகளை சேர்க்கவும், நீக்கவும் மிக கடுமையான செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன. மக்கள் அவ்வளவு எளிதாக இந்த முறையில் கார்டுகளை வாங்க முடியவில்லை. அதேபோல் பெயர் நீக்கமும், சேர்ப்பும் இதில் மிகவும் கடினமாக உள்ளது. இதன் காரணமாக புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்த பலருக்கு ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

புதிய ரேஷன் கார்டு: ர மீதம் உள்ள பல பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும். இதற்காக ஸ்மார்டு கார்டு அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதிய ரேஷன் கார்டுகளை வழங்க இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. மார்ச் முதல் வாரத்திற்குள் பெரும்பாலும் விடுபட்ட நபர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விடும் என்று தகவல்கள் வருகின்றன.

ஆனால் அவர்களும் உடனே ரேஷனில் பொருட்களை வாங்க முடியாது. அவர்களுக்கான புதிய லிஸ்ட் தயாரான பின்பே ரேஷனில் பொருட்கள் வாங்க முடியும் என்று ரேஷன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+