மகளிர் உரிமைத்தொகை.. உங்களுடன் ஸ்டாலின் முகாமை மிஸ் பண்ணிட்டிங்களா? பிரச்சனை இல்லை! புது அப்டேட்
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு நீட்டித்திருக்கிறது. விடுபட்ட பெயர்களுக்கும் விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கபட்ட நிலையில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் இதற்கான மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாம்களில் மனுக்களை கொடுக்க தவறியவர்களுக்கு மாற்று ஏற்பாடும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது மகளிர் உரிமைத்தொகை. வீட்டில் உள்ள பெண்கள், குடும்பத்திற்காக உழைத்து ஓடாக தேய்ந்து போய்விடுகிறார்கள். பெண்களின் உழைப்பை சுரண்டும் ஆண்கள் தங்களை குடும்பத்தின் தலைவனாக பாவலா செய்துக்கொள்கிறார்கள். அப்படியெனில் பெண்களில் நிலை என்ன? என்று பரவலாக பேச்சுகள் எழுந்த நிலையில், திமுகவின் மகளிர் உரிமைத்தொகை தேர்தல் வாக்குறுதி மிகுந்த வரவேற்பை பெற்றது.

தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுக, கடந்த 2023ம் ஆண்டு செப். 15ம் தேதி முதல் ரூ.1000 என குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகின்றது. இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது முதல்கட்டமாக 1.065 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதில் சிலருக்க உரிமைத் தொகை விடுபட்டிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பயனர்கள் சேர்க்கப்பட்டு தற்போது 1.15 கோடி பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.1000 என்பது சாதாரண விஷயமாக, சிறு தொகையாக நகர வாசிகளுக்கு தெரியலாம். ஆனால், கிராமப்புறங்களில் இன்றும் ரூ.100க்கும் ரூ.150க்கும் விவசாய கூலிகளாக சென்றுக்கொண்டிருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இந்த தொகை மிகப்பெரியது. எனவே இந்த திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், புதியதாக சிலர் விண்ணப்பித்து வருகின்றனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
இருப்பினும் சிலர், இந்த முகாம்களையும் தவறவிட்டிருக்கின்றனர். எனவே இவ்வாறு தவறவிட்டவர்கள், வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் முகாம்களில் விண்ணப்பிக்க ஏதுவாக, அந்த கூட்டத்தில் விண்ணப்பங்களை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
-
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications