Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு.. இன்றே ரூ.5000 வரவு வைப்பு.. ஸ்டாலின் மெகா சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!

Magalir urimai thogai

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!, என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

ஸ்டாலின் விளக்கம்

ஸ்டாலின் கூறிய விளக்கத்தில், தேர்தலுக்காக மகளிர் உரிமை தொகை தடுக்கப்படலாம். எனவே ப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மொத்தமாக 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் .

மேலும் அடுத்த திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் அறிவித்துள்ளார்.

அதிமுக அறிக்கை - பதிலடி

அதிமுக தேர்தல் வாக்குறுதிக்கு இதன் மூலம் திமுக பதிலடி கொடுத்துள்ளது. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) தனது முதல் கட்ட வாக்குறுதிகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.

1. 'குலவிளக்கு திட்டம்' எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து ரேஷன் அட்டைதாரர் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் இந்த உதவித்தொகை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

2. நகரப் பேருந்துகளில் ஆண், பெண் இருபாலருக்கும் இலவசப் பயணம்

3. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் பணி நாட்களை 125லிருந்து 150 ஆக உயர்த்தப்படும்.

4. வீடற்றவர்களுக்கு நகர்ப்புறங்களில் குடியிருப்புகள் வழங்குதல், திருமணத்திற்குப் பிறகு மகன்கள் தனிக்குடித்தனம் அமைக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயக் குடும்பங்களுக்குத் தனி வீடுகள் கட்டுதலுக்கு நிதி உதவி செய்யப்படும்.

5. 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது.

இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+