2 ஆம் கட்டமாக சேர்க்கப்பட்ட 50% பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம்? தங்கம் தென்னரசு கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ரூ.1,000 வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை படிப்படியாக முடக்க அரசு திட்டமிடுகிறதா என கேள்வி எழுப்பிய தங்கம் தென்னரசு, மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தை அரசு விளக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Magalir Urimai Thogai Rs 1 000 stopped for the 50 of beneficiaries added in the second phase Thangam Thennarasu questions

மகளிர் உரிமைத் தொகை

கடந்த திமுக ஆட்சியில் 2023 ஆம் ஆண்டு முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தமிழகத்தில் 1.06 கோடி பேருக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் அரசு சார்பில் வரவு வைக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். பின்னர் தேர்தல் நேரத்தில் மேலும் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 1.31 கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அளிக்கப்பட்டு வந்தது.

பாதி பேருக்கு வரவில்லை

இந்நிலையில் கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் விஜய் தலைமையிலான அரசும் இதே 1.31 கோடி பேருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறது. தேர்தலுக்கு முன்பு தவெக ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என விஜய் கூறியிருந்தார். ஆனால் தற்போதைக்கு இந்த தொகையை வழங்க முடியாது எனவும் கூடிய விரைவில் ரூ.2,500 வழங்கப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தகுதி இருந்தும் எங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என கூறி ஏராளமானோர் மனு அளித்து வந்தனர். ஆனால் இது தொடர்பாக தமிழக அரசு கவனித்து வருகிறது என்றும் கூடிய விரைவில் தகுதியான எல்லாருக்கும் ஆட்டோமேட்டிக்காக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக சிலருக்கு ரூ.1,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

தங்கம் தென்னரசு கேள்வி

தாலுகா அலுவலகங்களில் கேட்டதற்கு இரண்டாம் கட்டமாக இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் தகுதி இல்லாதவர்களுக்கு இந்த தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைப் படிப்படியாக முடக்குவதற்கு அரசு திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.

படிப்படியாக நிறுத்தப் போகிறதா?

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஆக உரிமைத்தொகையை உயர்த்தி வழங்கப்போவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற்று வரும் தகுதியுள்ள பெண்களுக்குக்கூட எந்தக் காரணமுமின்றி அந்தத் தொகையை நிறுத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாகும்.

எனவே, பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் வழங்க வேண்டிய ரூ.1,000 உரிமைத்தொகையையாவது தொடர்ந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். உரியவர்களுக்கான தொகை நிறுத்தப்பட்டிருப்பின் அதற்கான காரணத்தையும் அரசு உடனடியாக விளக்க வேண்டும்.. என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+