தேதியை குறிச்சுக்கோங்க! இந்த 2 நாட்கள் மகளிர் உரிமை தொகை திட்ட முகாம் நடைபெறாது! மாற்று தேதி இதுதான்
சென்னை: சுதந்திர தினம் மற்றும் கிராம சபைக் கூட்டம் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான முகாம் வரும் ஆகஸ்ட் 15,16 தேதிகளில் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தலைவிகளாக இருக்கும் பெண்களின் உழைப்பு குறித்து சமீப காலமாக விவாதங்கள் மேலெழுந்து வருகின்றன. என்னதான் ஆண் வெளியில் சென்று சம்பாதித்து வந்தாலும் கூட வீட்டில் குழந்தைகளை வளர்ப்பது, வீட்டை பராமரிப்பது, சேமிப்பு ஆகியவற்றை பெண்கள்தான் மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களது உழைப்பு கணக்கிடப்படுவதே கிடையாது. ஆண்கள் எப்படி போய் சம்பாதித்து வந்தாலும் அந்த பணத்தில் சேர்த்த சொத்தில் பெண்களுக்கும் சம பங்கு இருக்கிறது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

இப்படியாக தங்கள் உழைப்புக்கான மதிப்பு எங்கே? என்று பெண்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்தான் அரசியல் கட்சிகள் குடும்ப தலைவிக்கான உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. அந்த வகையில் குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது.
இதனையடுத்து திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் உரிமைத்தொகை இன்னும் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இது குறித்து பேசி விமர்சிக்க தொடங்கினர். சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
நிலைமையை கவனித்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பையடுத்து இதற்கான தயாரிப்பு பணிகளை துறை சார்ந்த அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்காது. மாறாக இதனை பெற சில அளவுகோல்களை அரசு அறிவித்துள்ளது. இப்படியாக தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்ட முகாம் ஜூலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரையும் நடைபெறுகிறது. அந்த வகையில் கடந்த 4ம் தேதி முதல்கட்ட சிறப்பு முகாம் முடிவடைந்தது.

தற்போது மக்களிடம் பூர்த்தி செய்து வாங்கப்பட்ட சுமார் 80 லட்சம் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட முகாம் 5ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இது ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது ஏற்கெனவே பெறப்பட்ட படிவங்கள் அனைத்தும் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆகஸ்ட் 15 மற்றும் 16ம் தேதிகளில் இந்த முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்தி குறிப்பில், "வரும் 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால் அதையொட்டி கிராம சபைக் கூட்டங்கும் நடைபெறுகின்றன. எனவே, 15 மற்றும் 16ம் தேதிகளில் மகளிர் உரிமைத் தொகைக்காக திட்டமிடப்பட்டிருந்த முகாம்கள் நடைபெறாது. இதற்கு பதிலாக தமிழகம் முழுவதும் 34,000 இடங்களில் வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் தாரேஷ் அகமது தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications