Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”அப்பா” ஸ்டாலினுக்கு கைக்குட்டை கொடுத்த ஈழ தமிழ் பெண்.. மகளிர் உரிமைத் தொகை நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ம் கட்ட விரிவாக்க நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலினுக்காக திருவண்ணாமலை ஈழத்தமிழர் முகாமில் இருந்து வந்திருந்த சாரா என்ற பெண் அப்பா என்று எழுதப்பட்டிருந்த கைக்குட்டை ஒன்றை கொண்டு வந்திருந்தார். மேடையில் இருந்து இறங்கி அந்த கைக்குட்டையை ஸ்டாலினிடம் ஈழ தமிழ் பெண் கொடுத்தது அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டது.

magalir-urimai-thogai-scheme-event-eelam-tamil-woman-calls-cm-stalin-appa-emotional-moment-unfol

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

இதன்படி, ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக மாதம் மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கிற்கே அனுப்பட்டு வருகிறது. எனினும் இதில் சில பெண்களை சேர்க்கும் வகையில் சில விதிகளில் தளர்வு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிப்பதற்காக முகாம்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து மேலும் பல பெண்கள் சேர்க்கப்பட்டு அதாவது 17 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கான உரிமைத் தொகை நேற்று வெல்லும் தமிழ் பெண்கள் தலைப்பின் கீழ் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2-ம் கட்ட விரிவாக்க நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்தது.

சாதனை படைத்த பெண்கள் பங்கேற்பு

முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், நன்னிலம் மகளிர் நிலவுடைமை திட்டம், விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், விளையாட்டு, வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், சுய உதவிக்குழுக்கள், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள் போன்ற திட்டங்களால் பயன்பெற்ற பெண்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் தமிழகத்தில் சாதனை படைத்த பெண்களும் கலந்து கொண்டனர்.

ஈழ தமிழ்ப் பெண்

பெண் பிரபலங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள், கல்வி, தொழில் முனைவோர், மருத்துவம், காவல், விவசாயம் கலை, விளையாட்டுகளில் சாதனை படைத்தவர்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் திருவண்ணாமலை ஈழத்தமிழர் முகாமில் இருந்து வந்திருந்த சாரா என்ற பெண்ணும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் முதல்வர் ஸ்டாலினுக்காக ஒரு கைக்குட்டை ஒன்றை கொண்டு வந்து இருந்தார்.

ஸ்டாலினுக்கு 'அப்பா' கைக்குட்டை வழங்கிய ஈழப் பெண்

அப்போது அந்த பெண் முதல்வர் ஸ்டாலினை பார்த்து, அப்பா என அழைத்தார். மேலும் உங்களுக்காக நான் ஒரு கைக்குட்டை கொண்டு வந்திருக்கிறேன். அதை உங்களிடம் தரலாமா? என கேட்டார். முதல்வர் சம்மதம் தெரிவிக்கவும், மேடையில் இருந்து ஓடி வந்த அந்த பெண் முதல்வர் ஸ்டாலினின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பின்னர் அந்த கைக்குட்டையை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தார்.

அந்த கைக்குட்டையில் "அப்பா" என ஆரி ஒர்க் செய்யப்பட்டு இருந்தது. கீழே 'ஈழ மகள் சாரா' என்று எழுதப்பட்டு இருந்தது. முன்னதாக அந்த பெண் பேசுகையில், "நாங்கள் அரிசி குடோன் அருகே பிளைவுட் சீட் வீட்டில் 10-க்கு 10 என்ற அளவில் வசித்து வந்தோம். பள்ளிக்கு சென்று தான் கழிவறை செல்வேன். கடந்த 2 ஆண்டுகளுக்குமுன்பு அரசு எங்களுக்கு கழிவறை வசதியுடன் தச்சூரில் வீடு கட்டி கொடுத்தது.

திருப்பரங்குன்றம் மலையில் ஏறி கத்தினேன்

வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி மூலம் ஆரிஒர்க் வகுப்புக்கு சென்றேன். இப்போது வீட்டில் இருந்து எனக்கு வருமானம் கிடைக்கிறது. வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி மூலம் எனக்கு வெற்றி நிஜமாக கிடைத்து இருக்கிறது. இதனால் தான் நான் இங்கு நிற்கிறேன் என பேசினார். இதேபோன்று திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சரண்யா என்ற பெண், 'நான் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி மூலம் 'பிராட்பேண்டு' படித்தேன்.

நான் முதல் முறையாக இப்போது தனியாக சென்னை வந்திருக்கிறேன். விழாவில் கலந்து கொள்ள வரும் முன்பு கூட நான், திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று இருந்தேன்.. மலையில் ஏறி நின்று நான் ஜெயித்து விட்டேன் முருகா என்று கத்தினேன்' என்று பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+