விஷால் சிங்கம் போல இருந்தாரே, இப்படி மாறிட்டாரே! மகுடம் BTS-ஐ பார்த்தீங்களா? அது பெரிய தவறு: அந்தணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால் இயக்கி நடித்த "மகுடம்" படத்தின் Behind The Scenes வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி சோஷியல் மீடியாவில் வெளியாகி கொண்டிருக்கின்றன.. இதை பார்த்து நெட்டிசன்கள் விஷாலை டிரோல் செய்து வருகிறார்கள்.. இதுகுறித்து மூத்த சினிமா விமர்சகர் அந்தணன் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.. அத்துடன், விஷாலின் உடல்நலன் குறித்தும் அக்கறையுடன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

Media circle சேனலுக்கு பேட்டி தந்தள்ள அந்தணன், "சமீபத்தில் வெளியான "மரகதம்" படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஷால் மானிட்டரை பார்த்துச் செய்த சைகைகள் கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது.. சோஷியல் மீடியாவில் பலரும் கிண்டலடிப்பது, விஷாலின் ரசிகர்களுக்கும் மிகுந்த வருத்தத்தை தருகிறது.

Magudam BTS Video

விஷாலின் சமீபத்திய மாறுபட்ட நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறை விமர்சனங்களை சினிமா ஹீரோக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.. இது போன்ற ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை வெளியிடுவது படத்திற்கு பிளஸ் என்று நினைத்து செய்யும்போது அது எப்படி மைனஸாக மாறுகிறது என்பதை விஷால் புரிந்துகொள்ள வேண்டும்..

இதை எடுத்து சொல்லி திருத்துவதற்கு, அவரிடம் சரியான நபர்கள் இருக்க வேண்டும். ஆனால், தலைவரைப் புகழ்ந்து கொண்டே எப்போதும் ஜிங் ஜாக் அடிப்பவர்களையே பெரும்பாலானோர் தங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள்.

பிரார்த்தனை வீடியோ டிரோல்

முன்பெல்லாம் நடிகர் சங்கத் தேர்தலில் மிகப்பெரிய ஆட்களான ராதா ரவி மற்றும் சரத்குமார் ஆகியோரை எதிர்த்து நின்று வெற்றி பெற்று, ஒரு சிங்கம் போலவும் நிஜ வாழ்க்கை ஹீரோவாகவும் விஷால் வலம் வந்தார். ஆனால், அந்த முந்தைய கம்பீரம் இப்போது மறைந்துபோய், அவர் செய்யும் சில செயல்களால் மற்றவர்கள் சிரிக்கும் அளவிற்கும், சமூக வலைதளங்களில் கடுமையாகத் ட்ரோல் செய்யப்படும் அளவிற்கும் தன்னை அவரே மாற்றிக் கொண்டுவிட்டார்.

ஏற்கனவே அவர் பிரார்த்தனை செய்து சாப்பிட்டதையே இன்னும் டிரோல் செய்கிறார்கள். அப்படியிருக்கும்போது மகுடம் ஷூட்டிங் ஸ்பாட் BTS காட்சிகள் தேவையற்றது.. இது பிளஸ் ஆக இருக்கும் என்று நினைத்து விஷால் செய்கிறார், ஆனால் அது நெகட்டிவ்வாக முடிந்து விடுகிறது..

விஷால் தன்னுடைய படங்களை சரியாக திட்டமிடாமல், தானே இயக்கும் ரிஸ்குகளை எடுப்பதும், சிறந்த இயக்குநர்களைத் தவிர்த்துவிட்டுப் படங்களை முழுமையாகத் தாமே கையில் எடுப்பதும் மிகப்பெரிய தவறாகும்.

விஷால் பிளஸ் மைனஸ்

அதே சமயம், விஷால் மீது வெறித்தனமான அன்பு செலுத்தும் ரசிகர் கூட்டம் தியேட்டர் வாசல்களில் இன்றும் உள்ளது.. அதனால் விஷால் தனது பிளஸ், மைனஸ்களை உணர்ந்து செயல்பட வேண்டும்.

விஷாலுக்கு அரசியலுக்கு வரும் ஆசை இருப்பது இயல்பானது என்றாலும், சினிமாவில் நல்ல நிலையில் சம்பாதித்துக் கொண்டிருக்கும்போது, இன்னும் சில ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டுப் பலத்த ரசிகர் ஆதரவோடு சரியான நேரத்தில் களம் இறங்குவதே முறையானதாக இருக்கும்.

ஆனால் விஷால் முதலில் தனது உடல்நலத்தை பார்த்து கொண்டு, தன்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.. அரசியலிலோ அல்லது சினிமாவிலோ தன்னை சுற்றியிருக்கும் ஜால்ராக்களை நம்பி ஏமாறக் கூடாது.

"துப்பறிவாளன்" 2

"துப்பறிவாளன்" படத்தின் 2ம் பாகத்தை லண்டனில் படமாக்கும் போது இயக்குநர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.. தயாரிப்பாளராக விஷால் அங்கு பல சிரமங்களை எதிர்கொண்டார். விஷால் ஒரு கடுமையான உழைப்பாளி என்பதால், தயாரிப்பாளராக அவர் கணக்கு வழக்குகளில் மிகவும் தெளிவாகவும் கறாராகவும் இருப்பார்.. இரவு தாமதமானாலும் அன்றைய செட்டில்மென்ட்களை முடித்துவிட்டே அங்கிருந்து கிளம்புவார்.

லண்டன் போன்ற அதிக செலவாகும் இடங்களில் ஷூட்டிங் நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இயக்குநர் மிஷ்கினின் பணிச்சூழலை சரியாக கையாள முடியாமல் விஷால் தானே இயக்க முற்பட்டது பின்னடைவை ஏற்படுத்தியது. அர்ஜுன் போன்ற பல டைரக்டர்களுடன் பணிபுரிந்திருந்தாலும், சொந்தமாக ஒரு படத்தை முழுமையாக இயக்குவதற்கான பரிமாணங்கள் விஷாலுக்கு இன்னும் முழுமையாகக் கைவரவில்லை" என்றெல்லாம் கருத்து தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+