Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாசிவராத்திரி..மாசி மகம்..விரதம் இருந்து வணங்கினால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் மாசி மாத விஷேசங்கள்

மாசி மாதத்தில் வருகின்ற சங்கடகர சதுர்த்தி அபூர்வ சக்தி வாய்ந்ததாகும். இந்த நாளில் அருகம்புல் மாலை அணிவித்து விநாயகரை மனதார வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாசி மாதம் கும்ப மாதம். மாசி மாதத்தில் ஏழை எளியவர்களுக்கு வயிறார உணவு படைத்தால் மூன்று மடங்கு புண்ணிய பலன்களை பெறலாம். மாசி மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தில் மகாசிவராத்திரி விழா சிவ ஆலயங்களில் கோலாகமாக பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படும். மாசி அமாவாசை நாளில் அம்மன் ஆலயங்களில் மயான கொள்ளை நடைபெறும். மாசி மகம் திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படும். என்னென்ன விரத நாட்கள் மாத மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.

திருமணமான பெண்கள் இந்த மாதத்தில் தாலி கயிறு பிரித்து புதிதாக அணிந்து கொண்டால் சகல சௌபாக்கியங்களும் அடைவார்கள் என்பது சம்பிரதாயம். மாசி மாதத்தில் வருகின்ற சங்கடகர சதுர்த்தி அபூர்வ சக்தி வாய்ந்ததாகும். இந்த நாளில் அருகம்புல் மாலை அணிவித்து விநாயகரை மனதாக துதித்தால் சகல தோஷங்களும் நீங்கும்.

ஆழ்வார்களில் மிகவும் பிரசித்து பெற்றவர் குலசேகர ஆழ்வார். அவர் இந்த மாதத்தில் வரும் புனர்பூச நட்சத்திரத்தில் தான் அவதரித்தார். மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகம் கும்பமேளாவாக கொண்டாடப்படுகிறது.

Maha Sivarathiri, Masi magam importance festival for the tamil month of Masi matham

மாசி மாதத்தில் வருகின்ற ஏகாதசி விரதத்தை மனதார மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும். உயர்ந்த படிப்பு மேற்கொள்ள விரும்புகின்றவர்கள் ஆராய்ச்சி கல்வியை தொடங்க ஆசைப்படுபவர்கள் மாசி மகத்தன்று அந்த காரியத்தில் இறங்கினால் மிகச் சிறப்பான பலனை பெறலாம். இந்த மாதத்தில் மகாவிஷ்ணுவை துளசி இலையால் அர்ச்சனை செய்து இதயபூர்வமாக பூசித்தால் அனைத்து துன்பங்களும் நம்மை விட்டு விலகி ஓடும்.

மாசி 1 விஷ்ணுபதி புண்ணியகாலம். காலாஷ்டமி, மகேஷ்வராஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவதுண்டு. தமிழ் மாத கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது. முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது. மாசி மாத பிறப்பன்று பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மரத்தை வணங்கி 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள். 27 சுற்று முடித்த பின்பு மீண்டும் கொடிமரத்தை வணங்க வேண்டும்.

மாசி மாத பிறப்பன்று பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மரத்தை வணங்கி 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள். 27 சுற்று முடித்த பின்பு மீண்டும் கொடிமரத்தை வணங்க வேண்டும்.

மாசி 4 ஷட்திலா ஏகாதசி கொண்டாடப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி எனப்படும். பூசணிக்காய், தேங்காய், கொய்யாப் பழம், கொட்டைப் பாக்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றால் ஸ்வாமியை பூஜை செய்ய வேண்டும். வேத வல்லுநர் ஒருவரை மகா விஷ்ணுவாக பாவித்து, அவருக்குத் தண்ணீர்ச் சொம்பு, செருப்பு, குடை, கரும்பு, எள்ளுடன் கூடிய பாத்திரம், கறுப்புப் பசு ஆகியவற்றை தானமாகக் கொடுக்க வேண்டும். எள்ளை அரைத்து உடலில் பூசிக் கொள்வது, அரைத்த அதே எள்ளுடன் நீராடுவது, எள்ளை தானமாகக் கொடுப்பது, எள்ளை வைத்து ஹோமம் செய்வது, எள்ளையும் நீரையும் சேர்த்து தானமாகக் கொடுப்பது, எள் கலந்த உணவை உண்பது என ஆறு வகையாக எள்ளை உபயோகிப்பதால், இது ஷட் திலா எனப்படுகிறது.

மாசி 6 ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களில் விடிய விடிய அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்து வணங்க நினைத்த காரியம் கைகூடும்.

மாசி 8 திங்கட்கிழமை சோமாவதி அமாவாசை மௌனி அமாவாசை. எல்லா அமாவாசையும் மிகவும் முக்கியமானது என்றாலும், திங்கட்கிழமை வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று பெயர். சோமாவதி அமாவாசை நாளில் விரதம் இருப்பதன் மூலம் பிரம்மா - விஷ்ணு - சிவன் என்னும் மூவரின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும். மாசி மாத அமாவாசை நாளில் பித்ரு தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

மாசி 8 சனிப்பிரதோஷம் சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும். ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவங்களும் நீங்கி சிவன் அருள் கிடைக்கும். சனி மகாபிரதோஷ நாளில் நாம் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.

Maha Sivarathiri, Masi magam importance festival for the tamil month of Masi matham

மாசி 9 ஆம் தேதி சிறிய திருவடி, பல பெருமைகளைக் கொண்ட அனுமனை, மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனுக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார். அதனால் இவரை மகாவிஷ்ணுவின் சிறிய திருவடியாகக் கூறுவர்.
அதே சமயம் கருடாழ்வாருக்குக் கிடைக்காத ஒரு பெருமையும் அனுமனுக்குக் கிடைத்தது. அதாவது பெரிய திருவடியான கருடனுக்கு இல்லாத அளவில் தனிக் கோவில்கள் அனுமனுக்குப் பல அமைந்திருக்கின்றன.

மாசி 22 மாசி மகம். மாசிமகத்தன்று பிரசித்திபெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும். பித்ரு தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம். இதனால், மாசிமகத் தீர்த்தவாரியின்போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும்.

மாசி 22 வாஸ்து நாள் வீடு கட்ட கட்டிடங்கள் கட்ட வாஸ்து பூஜை செய்யலாம். வாஸ்துபகவானை சிறப்பாக வணங்க நன்மைகள் நடைபெறும்.

மாசி 23 ஹோலி பண்டிகை நாட்டில் இளவேனிற்காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பனி காலம் முடிந்து இளவேனிற்காலம் தொடங்க உள்ளது. மாசி பவுர்ணமி நாளில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண அவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணரும், ராதையும் மகிழ்ந்து கொண்டாடிய திருவிழா ஹோலி என்றும் சொல்லப்படுகிறது. ஆயர்பாடி மக்களும், ஆவினங்களும் கொண்டாடிய சந்தோஷத் திருவிழா ஹோலி. உறவுகள், நண்பர்கள் என எந்த பேதங்களும் இல்லாமால் கொண்டாடும் இந்த ஹோலிப் பண்டிகை மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

மாசி 26 சங்கடஹர சதுர்த்தி. மாசிக்கயிறு பாசியேறும் வரை நிலைக்கும்', 'மாசிக்கயிறு பாசி படியும்' என்னும் பழமொழிகள் வழக்கில் உண்டு. மாசி சங்கடஹர சதுர்த்தியன்று மாலை நேரத்தில் 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் மஞ்சள் கயிறு மாற்றினால் சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும். சங்கடம் போக்கும் விநாயகரை வணங்க ஏற்ற நாள் சங்கடஹர சதுர்த்தி மாசி மாதம் 22ஆம் தேதி வருகிறது.

மாசி 29 ரங்கபஞ்சமி விழா ஹோலி பண்டிகையின் தொடர்ச்சியாக ரங்க பஞ்சமி கொண்டாடப்படுகிறது. பவுர்ணமிக்கு பிறகு 5ஆம் நாள் ரங்கபஞ்சமி கொண்டாடப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+