Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை..அதிரும் திருவண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றாக ஆரணி சட்டமன்றத் தொகுதி விளங்குகிறது.. தேர்தல் என்று வந்துவிட்டாலே ஆரணி தொகுதி மிகுந்த கவனம் பெற்று விடும்.. இப்போதும் அப்படித்தான் வேட்பாளர்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளது.. அப்படி என்ன நடக்கிறது ஆரணி சட்டமன்ற தொகுதியில்???

நெசவுத் தொழிலுக்கும், அரிசி ஆலைகளுக்கும் பெயர் பெற்றதுதான் ஆரணி தொகுதி.. அரசியல் ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்களையும் கண்டுள்ளது.. குறிப்பாக, வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமூக வாக்குகள் இங்கு வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன.. கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே இங்கு வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளன..

Arani Assembly Election 2026 Thiruvannamalai DMK Candidate Tamil Nadu Assembly Election 2026 Mahalakshmi Govardhan TN Election Special 2026 2026

ஆரணி சட்டமன்ற தொகுதி 2026

கடந்த 1951 முதல் 2021 வரை நடைபெற்ற 16 சட்டமன்றத் தேர்தல்களில், ஆரணி தொகுதி பெரும்பாலும் ஆண் வேட்பாளர்களின் ஆதிக்கத்திலேயே இருந்து வந்துள்ளது.. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்த ஒரு முக்கியக் கட்சியுமே பெண்களுக்கு வாய்ப்பு வழங்க முன்வரவில்லை என்பது தமிழக அரசியல் மிகுந்த கவனம் பெற்று வந்த தகவலாகும்.. இந்த ஃபார்முலாவைதான் திமுக தற்போது உடைந்துள்ளது.

வரப்போகும் தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில், திமுக தனது நேரடி போட்டியாக 7 தொகுதிகளை தேர்ந்தெடுத்துள்ளது.. இதில் போளூர் தொகுதியை மட்டும் தனது கூட்டணிக் கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கியுள்ள நிலையில், மீதமுள்ள 7 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது.

திருவண்ணாமலை வியூகம்

இந்தத் தேர்தல் வியூகத்தில் மிகவும் உற்றுநோக்கப்படும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? திருவண்ணாமலையின் 6 தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கி, ஆரணி தொகுதியில் மட்டும் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது திமுக தலைமை.. சுமார் 75 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில், முதல்முறையாக ஒரு பெண் வேட்பாளரை ஆரணியில் களம் இறக்கி ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

ஆரணி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை 1951 முதல் 2021 வரை நடந்த 16 தேர்தல்களில் திமுக சார்பில் 8 முறை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.. ஆனால் அவர்கள் அனைவரும் ஆண்களே..

ரூல்ஸ் உடைத்த திமுக

அதேபோல் அதிமுக சார்பில் 7 முறையும், காங்கிரஸ் சார்பில் 4 முறையும் போட்டியிட்ட வேட்பாளர்களும் ஆண்களாகவே இருந்துள்ளனர்.. புதிய நீதிக்கட்சி, தேமுதிக எனப் பல கட்சிகள் களம் கண்டபோதிலும், ஒரு பெண் கூட வேட்பாளராக நிறுத்தப்படவில்லை.. ஆனால், இந்த முறை அந்தப் பிம்பம் முற்றிலுமாக உடைக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் மகாலட்சுமி கோவர்தன், அதிமுக சார்பில் ஜெயசுதா மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தவமணி என மூன்று முக்கியக் கட்சிகளுமே பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.. இது ஆரணி தொகுதியின் தேர்தல் வரலாற்றில் முதல்முறை என்பதால், ஒட்டுமொத்தத் தொகுதியும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது..

சபாஷ் திமுக வேட்பாளர்

திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மகாலட்சுமி கோவர்தன், கல்வித் தகுதியிலும் அனுபவத்திலும் வலுவான பின்னணியைக் கொண்டவர்.. பி.இ பட்டதாரியான இவர், இப்போது கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.. அடிமட்ட அரசியல் முதல் நிர்வாக ரீதியிலான அனுபவம் வரை கொண்ட இவருக்கு சான்ஸ் வழங்கப்பட்டது, தொகுதியில் உள்ள திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திமுகவின் இந்த முடிவு, பெண் வாக்காளர்களை வெகுவாகக் கவரும் என்று அக்கட்சியினர் ரொம்பவே நம்புகிறார்கள்.. இதற்கிணையான பலத்துடன் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரும் தங்களது பெண் வேட்பாளர்களை முன்னிறுத்தி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

கவனம் பெறும் பெண் வேட்பாளர்கள்

திமுகவின் இப்படியொரு மாஸ்டர்பிளான் காரணமாக, ஏற்படும் பலன்கள் என்னவென்று பார்த்தால், அது மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்... நீண்ட காலமாக ஆண்களின் கோட்டையாக இருந்த ஆரணியில், தற்போது பெண் வேட்பாளர்கள் களம் இறங்கியிருப்பது பெண் வாக்காளர்களின் வாக்குகளைப் பிரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்..

முக்கியமாக, இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண் வாக்காளர்கள் மத்தியில் தங்களுக்கு என்று ஒரு பிரதிநிதி சட்டமன்றத்திற்குச் செல்வார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.. இது தேர்தல் வாக்கு சதவீதத்தை உயர்த்துவதுடன், தொகுதியின் நீண்டகாலப் பிரச்சனைகளை ஒரு பெண்ணின் பார்வையில் அணுகுவதற்கும் வாய்ப்பாக அமையும்.. 16 தேர்தல்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால், ஆரணி தொகுதி தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+