Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாது.. தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர்.. நம்ம மஹாலஷ்மி அக்காவா.. பரபரப்பில் மதுரை!

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு மதுரை மகாலட்சுமி பெயர் பரிந்துரையில் உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "யாருப்பா இந்த மகாலட்சுமி.. இவங்க தானா அது?" என்று புருவத்தை உயர்த்தி கவனிக்கிறார்கள் தமிழக பாஜக தொண்டர்கள்.. தமிழக பாஜக தலைவர் பதவிக்கு மகாலட்சுமியின் பெயரும் அடிபடுகிறதாம்.. இதுதான் இப்போதைக்கு பரபரப்பு தகவல்!

பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், முருகானந்தம், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, கே.டி.ராகவன் உள்ளிட்ட பலரும் தங்களுக்குதான் அந்த பதவி வேண்டும் என்று கேட்டு வந்தனர்.

இவர்கள் ஒவ்வொருவருமே பாஜக தலைமையுடன் மிக நெருக்கமானவர்களாகவும், ஒவ்வொரு வகையில் நன் மதிப்பை தலைமையிடம் பெற்றவர்களாகவும் இருப்பதுதான் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

முருகானந்தம்

முருகானந்தம்

இதனிடையேதான், அமித்ஷாவின் அழைப்புப்படி முருகானந்தம் டெல்லி சென்றுவிட்டு வந்தார். எதற்கான இந்த அழைப்பு என்பது தெரியாமலேயே, முருகானந்தம்தான் அடுத்த தலைவர் என்ற தகவலும் வேகமாக பரவியது. ஆனால், அதுவும் மெதுவாக அடங்கிப்போய்விட்டது. இதையடுத்து, லிஸ்ட்டில் முதன்மையாக இருப்பதாக சொல்லப்பட்டவர்கள் கட்சியின் மிக மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், அடுத்தவர் சமீபத்தில் வந்து கட்சியில் சேர்ந்த நயினார் நாகேந்திரன்.

நயினார்

நயினார்

தமிழக பாஜகவுக்கு ஒரு இளம் தலைவர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பது பாஜக எப்போதோ எடுத்த முடிவு.. அந்த வகையில் நயினாருக்குதான் முதலிடம் என்றார்கள்.. வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆளும் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நயினார் பொருத்தமாக இருக்கும் என்றும் கிசுகிசுக்கப்பட்டது..

மஹாலட்சுமி

மஹாலட்சுமி

திராவிட கட்சிகளின் உதவி இல்லாமல் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதை பாஜக தலைமை நன்கு உணர்ந்துள்ளது.. அந்த வகையில், பொன்.ராதாவைவிட, நயினாருக்கு திராவிட பிம்பம் உள்ளதால், அதனையும் பயன்படுத்தி கொள்ள தலைமை நினைப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்தது. இப்படி லிஸ்ட் பெரிசாகி கொண்டே போகும்போதுதான் மகாலட்சுமியின் பெயர் எழுகிறது.. லிஸ்ட்டில் மகாலட்சுமி பெயர் இடம்பிடித்துள்ளது சர்ப்ரைஸ்தான்!

பாஜக

பாஜக

யார் இந்த மகாலட்சுமி... மதுரையை சேர்ந்தவர்.. பாஜகவில் ஐக்கியமானவர்.. மாநில மகளிரணி தலைவர்.. பிரதமரின் மாநிலமான குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.. சௌராஷ்டி சமூகம்.. திறமையான பெண்.. நல்ல பேச்சாளர்.. அடிக்கடி மதுரை பகுதியில் இவரது போஸ்டர்களை பிரம்மாண்டமாக பார்க்க முடியும்... நிறைய படித்திருக்கிறார்.. சொந்தமாக பிசினஸ் செய்கிறார்.

அக்கா

அக்கா

சுயஉதவி குழுக்களை வைத்து எத்தனையோ ஏழை பெண்களுக்கு உதவி வருகிறார். இந்த அளவுக்கு செல்வாக்கு நிறைந்தவர்தான் மகாலட்சுமி.. பாஜகவில் இவர் 22 வருடமாக இருக்கிறார் என்றால், அரசியல் அனுபவம் நிறையவே இருக்கிறது. தமிழிசையைப் போலவே இவரையும் மதுரை பாஜகவினர் "அக்கா அக்கா" என்றுதான் அன்போடு அழைக்கிறார்கள். அவரும் தமிழிசை போலவே பாசக்காரராக இருக்கிறார்.

சிபாரிசு

சிபாரிசு

இருந்தாலும், தனிப்பட்ட முறையில் இவர் செய்து வரும் உதவிகள்தான் மக்கள் மனதில் இப்போதும் நிற்கின்றன.. இது எல்லாவற்றிற்கும் மேலாக டெல்லி தலைமையிடம் நல்ல அறிமுகமானவர்.. "அக்காதான் அடுத்த தலைவர், இவரைதான் சிபாரிசு செய்ய வாய்ப்பு உள்ளது" என்று இவரது ஆதரவாளர்களும் சொல்ல ஆரம்பித்துள்ளனராம்.

விரைவில் தெரியும்

விரைவில் தெரியும்

எனினும் மேலிடம் என்ன முடிவு செய்யும் என தெரியவில்லை.. இன்னும் 10 தலைவர் பதவிக்கு நியமனம் நடக்கும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் சொல்லி உள்ள நிலையில், மகாலட்சுமியின் பெயர் அடிபட துவங்கி உள்ளது மேலும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் கூட்டி வருகிறது. எப்படியோ ஒரு அக்காவால் விட்டுப் போன இடத்தை இன்னொரு அக்காவை வைத்து நிரப்பி.. பக்காவாக தேர்தலுக்குத் தயாரானால் சரித்தான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+