மஹாளய அமாவாசை! ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோயில்களில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மகாளய அமாவாசையையொட்டி மக்கள் தர்ப்பணம் செய்து முன்னோர்களுக்கு படையலிட்டனர். இதனால் நீர் நிலைகள் உள்ள கோயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

புரட்டாசி மாத மகாளய அமாவாசையொட்டி இறந்த முன்னோர்களுக்கு பல்வேறு கோயில்களிலும் நீர் நிலைகலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமானோர் தர்ப்பணம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Mahalaya Amavasya

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே வருகை தந்தனர். நீராடிவிட்டு இறந்த மூதாதையர்களுக்கு தேங்காய் , வாழைப்பழம் கருப்பு , எள்ளு மற்றும் பூ மலர்கள் ஆகியவை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

வருடம் தோறும் வரும் 12 மாத அமாவாசைகளில் திதி கொடுக்க மறந்தவர்களும், முன்னோர்களின் திதி, நட்சத்திரம் தெரியாதவர்களும், தை, ஆடி, அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்காதவர்களும், இந்த மஹாளய அமாவாசையின் போது மூதாதையர்களுக்கு திதி கொடுக்கலாம் என்பது ஐதீகம்.

அதன்படி புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி ஶ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, தில்லைநாயகி படித்துறை, ஓடத்துறை, படித்துறை ஆகிய புன்னிய நதிகளில் நீராடி பின்னர் தங்களது மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர்.

இதில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, காரைக்குடி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலையே வருகை தந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பின்னர் வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் மற்றும் திருவாணைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர்.

காவிரியில் நீர்வரத்து உள்ளதால் பொதுமக்களின் வருகை வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்பட்டது, மேலும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அது போல் ராமேஸ்வரத்திலும் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகிறார்கள். இதனால் கோயில்களில் ஏராளமான கூட்டம் உள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+