இதுக்கு தான் தமிழகத்தில் NDA வரக்கூடாது.. இஸ்லாமிய இடஒதுக்கீட்டை நீக்கிய பாஜகவால் கொதித்த ஸ்டாலின்
சென்னை: ‛‛மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை பாஜக நீக்கி உள்ளது. இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா? தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் என்டிஏ கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி! இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான் இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! "தமிழ்நாடா NDA-வா?" எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!'' என்று முதல்வர் முக ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். துணை முதல்வராக சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே உள்ளார். அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் துணை முதல்வராக அஜித் பவார் இருந்தார்.
இவர் விமான விபத்தில் மரணமடைந்ததால் தற்போது அவரது மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் பின்தங்கிய இஸ்லாமியர்களுக்கு தனியாக 5% இட ஒதுக்கீட்டை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் பிரிவின் கீழ் 'சிறப்புப் பின்தங்கிய பிரிவு-ஏ' ஆக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அதாவது 2014ம் ஆண்டில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசு, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதாவது அரசு வேலைகள், கல்வி ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டை அறிவித்தது. இதற்காக சட்டசபையில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அவசர சட்டம் சில சட்ட சிக்கல்களை எதிர்கொண்டது. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் இந்த இடஒதுக்கீட்டுக்கான அவசரச் சட்டம் 2014ல் காலாவதியான நிலையில், இட ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும், சான்றளிப்பு முறை தொடர்ந்த நிலையில், தற்போது அதையும் மகாராஷ்டிர அரசு ரத்து செய்தது. இந்தச் சூழலில் தான் மகாராஷ்டிராவில் இப்போது இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் தான் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய மகாராஷ்டிரா அரசுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க! இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள்.
அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் அவர்கள் 2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார். அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க.!
இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா? தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி! இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான் இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! "தமிழ்நாடா NDA-வா?" எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!'' என்று கூறியுள்ளார்.
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications