நானே வாதாடிக் கொள்கிறேன்.. நீதிபதியிடம் சொன்ன மகாவிஷ்ணு! ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார்!
சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் விலகியுள்ளார். மகாவிஷ்ணு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். மேலும், வழக்கில் தானே வாதாடிக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் மகாவிஷ்ணு.
அண்மையில் சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சொற்பொழிவை நடத்திய பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மஹாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டார். மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் மஹாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள மஹாவிஷ்ணு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த விவகாரத்தில் ஜாமீன் கேட்டு மகாவிஷ்ணு தரப்பு வழக்கு தாக்கல் செய்தது.
அதேநேரம் மகாவிஷ்ணுவை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி சைதாப்பேட்டை போலீசாரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்த நிலையில், புழல் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட மகாவிஷ்ணு சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்ற நான்காவது அமர்வு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
மகாவிஷ்ணுவின் தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணையும், போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கான அனுமதி கோரியுள்ள மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுள்ளார் மகாவிஷ்ணு. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், இந்த வழக்கில் தானே வாதாடிக் கொள்வதாகவும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார் மகாவிஷ்ணு.
மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன், வழக்கில் இருந்து விலகியுள்ளார். மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சைதாப்பேட்டை போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிறைவடைந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications