90ஸ் கிட்ஸ்னா பாருங்க.. தோனியை வைத்து கல்யாண மீம்ஸ்.. அந்த டான் மீம்ஸ்சும் வேற லெவல்
சென்னை: தமிழகத்தில் சூப்பர் ஹீரோவாக கொண்டாடப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை வைத்து பல மீம்கள் மற்றும் வீடியோக்கள் பரவி வருகின்றன. அதில் இரண்டு மீம்ஸ் வீடியோக்கள் வேறலெவலில் இருக்கின்றன. அவற்றை இப்போது பார்ப்போம்.
சிலர் சொந்தக்கார்களின் சொந்தக்காரர்களின் திருமணத்திற்கு சென்றால் மிகவும் அமைதியாக தனிமை விரும்பி போல், கூச்ச சுபாவத்துடன் அமைதியாக ஓரமாக உட்காருவார்கள். அவர்களை சுற்றி யார் இருந்தாலும், இல்லாதது போல் ரியாக்ட் செய்து, அமைதியாக வந்து அப்பாவி போல் அப்படியே அங்கிருந்து செல்வார்கள். அதிலும் மனைவியின் சொந்தக்காரர்கள் திருமண நிகழ்வு என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் கப்சிப் என்று ஓரமாக அமர்ந்து செல்வார்கள். மனைவி என்னதான்கூப்பிட்டு உற்சாகமாக பேசினாலும், ரியாக்சனே வராது.

ஆனால் நண்பர்களின் பார்டிக்கு போனால் அல்லது நண்பர்களின் விசேஷத்திற்கு போனால் அவர்களின் நடவடிக்கையே வேறுமாதிரி இருக்கும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று சூப்பராக இருப்பார்கள். இதை வைத்து தான் ஒரு மீம்ஸ் ஒன்று தோனியின் வீடியோக்களை வைத்தே வந்திருக்கிறது அதனை பாருங்கள்
— இட்லி (@Raittuvidu) May 24, 2023
இன்னொரு தோனி மீம்ஸ் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அது தோனி ஜெயித்ததை வைத்துதான். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் ஜலபுல ஜங் பாடல் ரொம்பவே பேமஸ். அந்த பாடலின் துவக்கத்தில பெண்கள் பைக் ஓட்ட அதன்பின்னர் ஜீப் மீது அமர்ந்தபடி வருவார் சிவகார்த்திகேயன் வருவார்.
அந்த மீம்ஸை போட்டு தோனியை பாராட்டி வருகிறார்கள்.அதில் கோலியும், மேக்ஸ்வேலும் வருகிறார்கள். உண்மையில் இந்த மீம்ஸ் வீடியோவும் வேறலெவில் இருக்கிறது.
நேத்து கிடைக்காம போய்டிச்சே இந்த வீடியோ...! pic.twitter.com/ezAslrIMAX
— iRoBo_V2.0 (@RoBo_Appavi) May 24, 2023












Click it and Unblock the Notifications