தொழிலில் சமரசம் இல்லாதவர் மகேந்திரன்.. வெற்றிமாறன் உருக்கம்
Recommended Video

சென்னை: பல திரைப்பட இயக்குநர்களுக்கு மகேந்திரன்தான் முன் மாதிரி என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.
இயக்குநர், மகேந்திரன் இன்று மரணமடைந்தார். இதுகுறித்து வெற்றிமாறன் இன்று அளித்தபேட்டியொன்றில் கூறியதாவது:
இன்று வரை முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் படங்களைப் பற்றி நாம் பேசுகிறோம். ஒவ்வொரு தலைமுறையும் வேறு ஒரு தளத்தில் அவரது திரைப்படங்களை பார்த்தபடிதான் இருக்கும்.

இன்றைக்கு இத்தனை திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்து இருந்தாலும், அவரிடம் கேட்டால், தனக்கு பிடித்த திரைப்படம் முள்ளும் மலரும் என்றுதான் சொல்லுவார். அதுதான் மகேந்திரன். காலம் கடந்தும் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர் மகேந்திரன். பல இயக்குனர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர். செய்யும் தொழிலில், எந்த ஒரு சமரசமும் செய்துகொள்ளாமல் பணியாற்றியவர். இவ்வாறு இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications